தமிழக அரசின் சார்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்ஸி, க்ரைண்டர், மின் விசிறி ஆகியன வினியோகிக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினத்திற்கான வினியோகத் துவக்க விழா, 05.02.2016. வெள்ளிக்கிழமையன்று 17.00 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சி.குமார் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் துவக்கவுரையாற்றினார்.
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பீ.சண்முகநாதன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விலையில்லாப் பொருட்கள் வினியோகத்தைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள், அதிமுக நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, நகரில் - வார்டு வாரியாக பொருட்களை வினியோகிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராம நிர்வாக அலுவலர் ஃப்ரான்ஸிஸ் மேற்பார்வையில் நடைபெறும் இப்பணியின்போது, பொதுமக்கள் தமது குடும்ப அட்டையைக் காண்பித்து, டோக்கன் பெற்றுச் செல்கின்றனர்.
நிர்ணயிக்கப்பட்ட நேரம் நிறைவுற்ற பின்பும், பொதுமக்கள் நலன் கருதி - கிராம நிர்வாக அலுவலர் இரவு நீண்ட நேரம் முகாமிட்டு, மின் தடையையும் பொருட்படுத்தாமல் பதிவுப் பணிகளை மேற்கொண்மை குறிப்பிடத்தக்கது.
பதிவுப் பணிகள் நிறைவுற்றதும் அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படங்கள்:
S.A.முகைதீன்
A.S.புகாரீ
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 14:50 / 11.02.2016.] |