காயல்பட்டினம் சதுக்கைத் தெரு - பெரிய சதுக்கையில் இயங்கி வரும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் நிகழ்வுகள் விழா குறித்து, அவ்வமைப்பின் சார்பில், அதன் செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
எமது அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் 28ஆம் ஆண்டுவிழா இனிதே நிறைவடைந்தது அல்-ஹம்துலில்லாஹ்
• பூமான் நபியின் ஸல்லல்லாஹ் அவர்களின் உதயதின விழா
• கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல்காதா; ஜீலானி ரலியல்லாஹீ அன்ஹீ அவர்களின் நினைவுநாள் விழா
• எம்மன்றத்தின் 28ஆம் ஆண்டு துவக்கவிழா
• அல்-குத்புர் ரப்பானி இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி ஷாதுலி ரலியல்லாஹீ அன்ஹீ அவர்களின் நினைவுநாள் விழா
• இந்தியா தாய்திருநாட்டின் 67ஆம் ஆண்டு குடியரசு தின விழா
முதல்-நாள் 25.01.2016 திங்கள் கிழமை முகஸ்கருர் ரஹ்மான் மகளிர்அரபிக்கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவிகளுக்காக பேச்சுப் போட்டி சதுக்கைத்தெரு ரவ்ழதுல் ஜென்னா தைக்கா (முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரி இல்லத்தரசிகள் பாடத்திட்டம்)வில் வைத்து மண்புநபியின் மறைவான ஞானம் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் 18 ஆலிமாகள் கலந்து தங்கள் பேச்சாற்றலை வெளிபடுத்தினர் இப்போட்டியின் நடுவர்களாக குத்பா சிறிய பள்ளியின் கதீபு நவ்வி முஹம்மது முஹியத்தீன் ஆலிம் மஹ்ழரீ அவர்களும் இளைஞர் ஐக்கிய முன்னணியின் முன்னள் செயலர் எஸ்.இ.அமானுல்லாஹ் அவர்களும் பணியற்றினர்
இதை தொடர்ந்து 26.1.2016 செவ்வாய்க்கிழமை காலை 5.45மணிக்கு கத்முல் குர்ஆன் மஜ்லிஸ் நடைபெற்றது.
அதனை தெடர்ந்து காலை 8.30மணியளவில் குடியரசுதின விழா கொடியை ஹாஜி டீ.எம்.ஆர்.மர்ஜீக் அவர்கள் கொடியேற்ற இந்நிகழ்ச்சிக்கு கலிஃபா முஹம்மது அலி ஆலிம் மஹ்ழரீ அவர்கள் தலைமை தாங்கினார்கள் தொடர்ந்து காயல் கலீல் அவர்கள் தேசப்பற்று பாடல் பாட அதனை தொடர்ந்து 9.30மணியளவில் பூமான் நபியின் புகழ்பாடும் புனித மவ்லீது சரீப் நடைபெற்றது.
பின்னார் ரவ்ழதுல் ஜென்னா பெண்கள் தைக்கா(முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரி இல்லத்தரசிகள் பாடத்திட்டம்)வில் 15 வயதிற்குப்பட்ட 46 மாணவிகள் கலந்து கொண்ட பேச்சுப்போட்டி அண்ணல் நபிகள் ஓர் அழகிய முன்மதிரி என்ற தலைப்பில் நடைபெற்றது அதனை தொடந்து மாலை 4.30மணிக்கு பெரிய சதுக்கை வாளகத்தில் நடைபெற்ற 15 வயதிற்குப்பட்ட 18 மணவர்கள் கலந்து கொண்ட பேச்சுப்போட்டி பார் உலகம் போற்றும் அண்ணல் நபிகளார் என்ற தலைப்பில் நடைபெற்றது.
பின்னர் மாலை 7மணியளவில் முஹியித்தீன் மாணவ மன்றத்தினர்கள் நடத்திய நஅத் சரீப் தப்சுடன் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இஷா தொழுகைக்கு பின் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.ஃபாயஜ் அஹமுது கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் அதனை தொடர்ந்து மன்றத்தின் செயலாளர் கே.எம்.ஏ.முஹம்மது முஹியித்தீன் மன்றத்தின் ஆண்டறிக்கையை தொடர்ந்து பிலால் பள்ளியின் இமாம் நவ்வி ஒய்.செய்யது சதகத்துல்லா ஆலிம் ஹைரி அவர்களும் அதனை தொடர்ந்து குத்பா சிறிய பள்ளியின் கதீபு நஹ்வி எஸ்.ஏ.கே.முஹம்மது முஹியத்தீன் ஆலிம் மஹ்ழரீ அவர்களும் சன்மார்க்க செற்பொழிவு நிகழ்த்தினர்.
9.30 மணியளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரு பயனாளிகளுக்கு தலா 18,500 மதிப்புள்ள மூன்று சக்கர சுமை வண்டி வழக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பரிசளிப்பு விழாவும், பொதுச் சேவையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு நமது அல்-அமீன் சர்பில் வழங்கப்படும் சேவைச் செம்மல் விருதும் வழங்கப்பட்டன இந்த ஆண்டிக்கான அல்-அமீன் சேவைச் செம்மல் விருது சதுக்கைத் தெருவைச் சார்ந்த மா;ஹீம் எம்.ஏ.சேகு அலி அவர்களின் மகனார் எம்.எஸ்.அபூபக்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு குத்பா பெரிய-சிறிய பள்ளிகளின் தலைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்க குத்பா பெரிய-சிறிய பள்ளிகளின் துணை தலைவர் ஹாஜி எஸ்.ஏ.ஜவாஹிர் அவர்கள் முன்னிலை வகித்து விருதினை வழங்கினர்.
பின்னர் குத்பா சிறிய பள்ளியின் கதீபு நஹ்வி எஸ்.ஏ.கே.முஹம்மது முஹியத்தீன் ஆலிம் மஹ்ழரீ அவர்கள் துவாவுடன் மஜ்ஜிஸ் இனிதே நிறைவு பெற்றது. பின்னர் 29.1.2016 வெள்ளிக்கிழமை சதுக்கைத்தெரு ஜென்னத்துல் காதிரிய்யா பெண்கள் தைக்கா (மக்தப் முஹியித்தீன்)வில் வைத்து பெண்கள் நஅத் சரீப் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பெண்கள் போட்டியில் பங்குபெற்றவர்களுக்கு எங்கள் சங்கத்திற்காக சேவை செய்யும் உறுப்பினர்களின் தாய், மனைவிகள் பரிசு வழங்கி சிறப்பித்தார்கள் இறுதியாக பாத்திஹா துவா சலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. அல்ஹம்துலில்லாஹ் posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[13 February 2016] IP: 37.*.*.* | Comment Reference Number: 43109
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
அணிகலனாய் அமைய ஐம்பெரும்விழாக்களும் அரங்கேறி நிறைவுகண்ட அல் அமீன் குழுவினர்கள் அனைவருக்கும் வெற்றிகண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் துஆக்களும் ஆம்மின் ஏக இறைவன் இன்னும் அமோகவெற்றிகளுடன் உலக நிறைவு நாள்வரை சிற்ந்துவெற்றிகானவும் இம்மை மறுமை நற்பலன்கள் தரவும் வல்ல இறைவன் அருள்புரிவானாக ஆமீன் விழாக்களை செம்மையாக நடத்த வரையிட்டோர்களுக்கும் வாழ்த்துக்களும் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross