காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி 12, 2001 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 41]
செவ்வாய், பிப்ரவரி 13, 2001
மேல்நிலை நீர்த்தேக்கம் திறப்பு!
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 லட்ச ரூபாய் செலவில் காயிதே மில்லத் நகரில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கம் மற்றும் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு, 4 லட்ச ரூபாய் செலவில் அழகாபுரியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கம், மற்றும் 1 லட்ச ரூபாய் செலவில் அருணாசலபுரத்தில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் படிப்பக திறப்பு விழாக்கள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மாலிக் பெரோஸ்கான் ஐ.ஏ.எஸ். தலைமை தாங்கினார். காயல்பட்டணம் பேரூராட்சி துணைத்தலைவர் ஹாஜி. எஸ். செய்யது அகமது வரவேற்புரையாற்றினார். கட்டிடங்களை திறந்து வைத்த தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் திருமதி எஸ்.ஜெனிபர் சந்திரன் சிறப்புரையாற்றினார்.
திருச்செந்தூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.டி.கே. ஜெயசீலன் எம்.பி. பேரூராட்சி உதவி இயக்குனர் இ.முருகன், நகர தி.மு.க. செயலாளர் எம்.என். சொளுக்கு, கவுன்சிலர் காயல் மகபூப், அருணாசலபுரம் ஊர் மகாஜன சபை தலைவர் திருத்துவராஜ், அல் அமீன் சங்க செயலாளர் ஆகியோர் பேசினர். காயல்பட்டணம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சு. ராமச்சந்திரன் நன்றி கூறினார். நிகழ்;ச்சிகளை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி துரை ராஜ்குமார் தொகுத்து வழங்கினார்.
|