DCW தொழிற்சாலையின் விரிவாக்கத்திட்டங்களை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் KEPA அமைப்பு தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 15 திங்களன்று தீர்ப்பு வெளியாகிறது. இது குறித்து அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.சாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டங்களுக்கு - மத்திய அரசு, 2014ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று அனுமதி வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA), தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளையில் தொடர்ந்த வழக்கு - மே 26, 2014 அன்று அனுமதிக்கப்பட்டது.
சுமார் 21 மாதங்கள் நடந்த இவ்வழக்கின் வாதங்கள், பிப்ரவரி 3 அன்று நிறைவுற்றன.
இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ம.சொக்கலிங்கம், பிப்ரவரி 16 அன்று ஓய்வு பெறுவதால், அந்த தேதிக்கு முன்பு - வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு தேதி குறித்த தகவல் இன்று பசுமை தீர்ப்பாய இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 15 திங்களன்று இவ்வழக்கின் தீர்ப்பினை நீதிபதி ம.சொக்கலிங்கம் மற்றும் நிபுணர் உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் அறிவிக்கவுள்ளனர்.
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |