இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம், 14.02.2016. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் இம்மாதம் 14-ம் தேதிஞாயிற்றுகிழமை மாலை 04.30 மணிக்கு, தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஹாஜி பி.மீராசா மரைக்காயர் அவாகள் தலைமையில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் காயல் மகபூப் அவர்கள் முன்னிலையில், காயல்பட்டணம் சதுக்கைத் தெருவிலுள்ள நகர அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதிர் மன்ஸிலில்நடைபெறவுள்ளது.
2016 மார்ச் 10-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் பங்கேற்பது, அமைப்பு பணிகள், 2016 சட்டமன்ற தேர்தல் --------------- அரசியல் நிலைமை மற்றும் தலைவரின் அனுமதியுடன் இதர விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், நகர தலைவர், செயலாளர்கள், அனைத்து பிறைமரி தலைவர்,செயலாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வருமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் நடைபெற்ற - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |