ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சொளுக்கு எம்.ஏ.முஹம்மத் ஈஸாவின் தம்பி சொளுக்கு எம்.ஏ,ஷெய்கு அப்துல் காதிர், நேற்று (10.02.2016. புதன் கிழமை) 23.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 49. அன்னார்,
சொளுக்கு முத்து அஹ்மத் - மர்ஹூமா புகாரீ ஃபாத்திமா தம்பதியின் மகனும்,
துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சொளுக்கு எம்.ஏ.முஹம்மத் ஈஸா (தொடர்பு எண்: +91 99409 88985), சொளுக்கு எம்.ஏ.அஹ்மத் ஜமால் (தொடர்பு எண்: +91 80156 46634), சொளுக்கு எம்.ஏ.ஷாஹுல் ஹமீத், சொளுக்கு எம்.ஏ.ஜாஃபர் ஸாதிக் (தொடர்பு எண்: +971 555 71 22 11), சொளுக்கு எம்.ஏ.ஹவ்வா மர்யம், சொளுக்கு எம்.ஏ.முஹம்மத் தம்பி (தொடர்பு எண்: +91 77081 69257) ஆகியோரின் சகோதரரும்,
இளைஞர் ஐக்கிய முன்னணியின் முன்னாள் செயலாளர் சொளுக்கு ஏ.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிரின் மனைவியின் சகோதரரும், சொளுக்கு ஏ.ஜெ.மன்ஸூர், ஹாஃபிழ் அப்துஸ் ஸமத், மஃஷூக் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று (11.02.2016. வியாழக்கிழமை) 17.00 மணியளவில் காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
படம்:
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ Y.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ
[விரிவான விபரம் இணைக்கப்பட்டது @ 12:40 / 11.02.2016.]
[புகைப்படம் இணைக்கப்பட்டது @ 4:50 pm / 11.02.2016] |