அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழையின்போது, சென்னையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கின.
காயல்பட்டினம் மக்களை ஒருங்கிணைத்து சென்னையில் இயங்கி வரும் காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் அமைப்பின் சார்பிலும் வெள்ள நிவாரணப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுள் - தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு புனர்வாழ்வுக்காக 6 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் KCGC சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும்,
29-01-2016 வெள்ளிக்கிழமையன்று KCGC அமைப்பின் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு (Rehabilitation) அளிக்கும் வகையில் சென்னை,கோட்டூரில் அமைந்துள்ள மஸ்ஜிதே ஹபீப் பள்ளிவாசலில் KCGC FLOOD REHABILITATION FUND DIATRIBUTION நிகழ்வுகள் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இந்த நிகழ்வில் 71 நபர்களுக்கு ரொக்கப்பணமும், வெள்ள பாதிப்பின்போது தனது காது கேட்கும் கருவிகளை இழந்த இரண்டு மாணவ, மாணவிகளுக்கு காது கேட்கும் கருவிகளும் , மொத்தமாக ரூ.5,97,700 (ரூபாய்.ஐந்து லட்சத்தி தொண்ணூற்று ஏழாயிரத்தி ஏழுநூறு) உதவிகள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
ஏற்கனவே இவ்வமைப்பின் சார்பாக மூன்று தவனைகளில் சுமார் 30 லட்சக்கணக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஷா அல்லாஹ் தேவையின் அடிப்படையில் இன்னும் தொடரலாம்.
இந்த நிகழ்வினை காயல்பட்டினத்தைச் சார்ந்த பத்திரிக்கையாளரும், சமூக சேவகருமான ஜனாப்.முஜாகித் அலி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
முன்னதாக கோட்டூர் Unity Public School மாணவர் அல்ஹாபிழ்.அஸ்ஸாத் அவர்களின் இறைமறை ஓதுதலோடு இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது,
இந்த நிகழ்விற்கு காயல்பட்டினத்தைச் சார்ந்த , தற்போது கோட்டூர் பள்ளியின் பொருளாளர் ஜனாப்.ஆடிட்டர்.அப்துல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்கள், சிறப்பு அழைப்பாளர்களாக அடையார் ஜும்மா பள்ளியின் தலைமை இமாம் மவுலானா ஆலிம் சதீதுத்தீன் பாக்கவி அவர்கள் கலந்து கொண்டு "இஸ்லாத்தில் மனிதாபிமான உதவிகள்" என்ற தலைப்பில் சிறிது நேரம் உரையாற்றினார்கள்,
இதனை தொடர்ந்து காயல்பட்டினத்தைச் சார்ந்த தொழில் அதிவரும் , ஜன்சேவா நிர்வாகிகளில் ஒருவரான ஜனாப்.L.K.K.லெப்பை தம்பி அவர்களும், கோட்டூர் பள்ளியின் இமாம் மவுலானா ஆசிக் இலாஹி காசிபி அவர்களும் " இஸ்லாம் கூறும் மனிதாபிமானம், தொண்டுகள்" என்ற தலைப்பில் சிறிது நேரம் உரையாற்றினார்கள்,
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு இறுதியாக KCGC அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜனாப்.குளம் முஹம்மது தம்பி அவர்கள் நன்றி உரையாற்ற இந்த நிகழ்வு சிறப்பாக நிறைவுபெற்றது.
இந்த நிகழ்விற்காக சகோ.சொளுக்கு முஹம்மது நூஹ், சகோ.நெட்காம் புகாஹி, சகோ.M.M.அஹமது, சகோ.நஜீம் பாபு, சகோ.பல்லாக் சுலைமான், சகோ.இப்னு சவுது ஆகியோர்களும் கோட்டூர் ஜும்மா பள்ளியின் நிர்வாகிகளும் சேர்ந்து இந்த நிகழ்விற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.எல்லா புகழும் ஏக வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சொளுக்கு முஹம்மது நூஹ்
செயற்குழு உறுப்பினர் KCGC - சென்னை
(தொடர்பு எண்: +91 93828 08007)
KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |