கேரள மாநிலம் - மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 28.02.2016. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளதாகவும், போட்டியிட விரும்புவோர் நாளை (14.02.2016.) முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
நமது மலபார் காயல் நல மன்றத்தின் (மக்வா) 2013 - 2016 பருவத்திற்கான செயற்குழுவின் பொறுப்புக் காலம் வரும் மார்ச் மாதம் 02ஆம் தேதியுடன் முடிவடைவதால், 2016 - 2019 பருவத்திற்க்கான செயற்குழுவை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 28-02-2016 அன்று நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது,
உறுப்பினர்கள் ஆர்வத்துடன் வரும் செயற்குழுவில் செயலாற்றுவதற்காக இந்த தேர்தலில் போட்டியிடுவதுடன் உங்கள் வாக்குகளை தவறாமல் பதிவிடவும், ஆதரவாளர்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross