தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 68வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
அதன் வரிசையில், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு மருத்துவ முகாம்கள் துவங்கின.
இந்த சிறப்பு முகாம்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் தலைமை தாங்கினார்.
டாக்டர் வே. பாவனாசகுமார் எம்.டி., காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.ராணி எம்.பி.பி.எஸ்., டாக்டர் க.ஜெப்ரி எம்.பி.பி.எஸ். ஆகியோர் உரையாற்றினர்.
பகுதி வார்டு (15வது வார்டு) நகர்மன்ற உறுப்பினர் கே.ஜமால், 7வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அந்தோணி, 16வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஏ. சாமு சகாபுதீன், நகர அ.தி.மு.க. மூத்த உறுப்பினர் எஸ்.ஏ.மொஹிதீன் ஆகியோர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
மருந்தாளுனர் அ.ஸ்டீபனின் நன்றியுரையுடன் துவக்க நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இம்முகாம்களில் - பொது மருத்துவம், இருதய நோய், தோல் நோய், சர்க்கரை நோய், குழந்தைகள் சிறப்பு நோய், பெண்கள் சம்பந்தப்பட்ட நோய் - ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பொது மக்கள் பெருந்திரளாக இம்முகாமில் கலந்துக்கொண்டனர்.
பிப்ரவரி 20 மற்றும் பிப்ரவரி 23 ஆகிய தேதிகளிலும் இம்முகாம்கள் நடைபெறும்.
புகைப்படங்கள் மற்றும் தகவலில் உதவி:
எஸ்.ஏ.முஹைதீன் (அ.தி.மு.க. மூத்த உறுப்பினர்) |