DCW தொழிற்சாலையின் விரிவாக்க திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை (ENVIRONMENTAL CLEARANCE) எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இன்று மதியம் 1 மணியளவில் நீதிபதி ம.சொக்கலிங்கம், தீர்ப்பின் இறுதி பாகத்தை வாசித்தார். அதில், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், DCW தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை (ENVIRONMENTAL CLEARANCE) ரத்து செய்ய இயலாது எனவும் தெரிவிக்கபட்டிருந்தது.
விரிவான தீர்ப்பு விபரங்கள் அடுத்த சில தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 17:00 / 20.2.2016]
1. Dua when struck with a calamity or when unable to do something posted byAbu Ahmed Sona (Ar Riyadh - KSA)[15 February 2016] IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43126
قَدَّرَ اللهُ وَمَا شَاءَ فَعَلَ
qaddar-allaahu wa maa shaa’a fa‛al
“Allah has decreed and what He wills, He does.”
2. Re:...தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் posted bymackie noohuthambi (kayalpatnam )[15 February 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43127
தீர்ப்பு நமக்க சாதகமாக வரவில்லையே என்று யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை. இந்த நாட்டின் இறுதி தீர்ப்பு உச்ச நீதி மன்ற தீர்ப்புதான். அதை நோக்கி நம் பார்வையை செலுத்துவோம். அதையும் மீறி இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை மீறி ஒவ்வொரு மாநிலமும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு நாம் போக தேவை இல்லை.
முஸ்லிம்களாகிய நாம் இந்திய இறையாண்மைக்கு மதிப்பளித்து அரசியல் சட்டம் நமக்கு தந்துள்ள எல்லா வழிகளிலும் போராடுவோம். இறுதி வெற்றி உண்மையின் பக்கமே இருக்கும். டீ குன்ஹா அளித்த தீர்ப்பை 18 வருடங்கள் பல கோடிகள் செலவு செய்து நடத்தப் பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பை ஒரே ஒரு பேனாவின் முனை மழுங்கடிக்க செய்த வரலாறு நாம் குமாரசாமி என்ற நீதிபதியின் தீர்ப்பு மூலம் அறிந்தோம்.வரலாற்றில் இது ஒன்றும் புதிதும் அல்ல ஏமாற்றம் தரும் செய்தியும் அல்ல. ஆனாலும் போராட்டம் இல்லாமல் நலம் விளையாது என்பதை மனதில் கொண்டு இறுதி வரை போராடுவோம்.
அல்லாஹ் துணை நிர்ப்பான். இந்த ஊர் மக்கள் ஒன்றிணைந்து இந்த தீய சக்திக்கு எதிராக போராட வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.
ஒரு முயலை குறிவைத்து சாகடித்து அதை நம் தோளில் போட்டுக் கொண்டு பெருமை பேசுவதைவிட ஒரு சிங்கத்துக்கு குறி வைத்து அது காயப் பட்டு நம்மிடம் இருந்து தப்பி விட்டது என்று நாம் பெருமை படுவோம். நமது லட்சியம் உயர்ந்தது. இலட்சக் கணக்கான உயிர்கள் நம்மை வாழ்த்தும்.
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்.
3. துவண்டு விட வேண்டாம்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[15 February 2016] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43128
தீர்ப்பு நமக்க சாதகமாக வரவில்லையே என்று யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை. இந்த நாட்டின் இறுதி தீர்ப்பு உச்ச நீதி மன்ற தீர்ப்புதான். அதை நோக்கி நம் பார்வையை செலுத்துவோம். அதையும் மீறி இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை மீறி ஒவ்வொரு மாநிலமும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு நாம் போக தேவை இல்லை.(c &p )
அந்த அல்லாஹ் உண்மையையும்,நேர்மையையும் இக்கொடிய நோயால் இன்னுயுரை நீத்தவர்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான், அவனின் பொறுமையின் ரகசியம் அவனுக்கு மட்டும் தான் தெரிந்த ஒன்றாகும்.
நாம் அனைவர்களும் நிம்மதி பெருமூச்சுவிடும் ஒரு புண்ணியமுடிவை வெகு விரைவில் தரத்தான் போகிறான் அந்த வல்ல ரப்பு!
துவண்டு விட வேண்டாம். தூய எண்ணத்துடன் தொன்றாற்றிய அன்பு உள்ளங்களே, அருமை சகோதரர்களே உங்கள் புண்ணிய பயணம் தொடரட்டும் நாங்களும் தொடர்ந்து மனம் தளராமல் துணைக்கு வரத்
தயாராக இருக்கிறோம். அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
நீதீயை விலைக்கு வாங்கி விடலாம் , இதயத்தை வாங்க முடியாது ,
நீதியை வளங்கியவர் உண்மையான தீர்ப்பு வளங்கி இருந்தால் சரியே
இல்லை என்றாள் எங்கள் சகோதரர்களுக்கு வந்த அந்த கொடிய நோய்
விரைவில் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கு வரும் அப்போலுது
கோடி பிடிபீர்கள் ,
மற்றொன்று :
kepa தொடர்ந்த வலக்கை தான் தீர்ப்பு வளங்கி இருக்கின்றீர்கள் இன்னும் எவ்வளவு பொது நல வளக்கு போடலாம் ,
இப்படியே இவர்களுக்கு மன உலசல் கொடுக்க வேண்டும் ,
காயல் வாசிகளே இனிமேலாவது உங்கள் குலந்தை கலை வக்கீல் படிக்க வையுங்கள் உங்கள் பிரசனைக்கு வாதாட மற்றவர்களை தான் நாடி உள்ளீர்கள் , உங்கள் குலந்தைகளை வலக்காட படிக்க வையுங்கள்
7. Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[16 February 2016] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43134
நடப்பவைகள் அனைத்தும் நன்மையாக அமையும், இன்ஷா அல்லாஹ்.
வேறு ஒன்றும் கருத்து சொல்லுவதற்கு இல்லை.
முன்பு ஒருமுறை, சவுக்கு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட வாசகங்கள் தான் நினைவுக்கு வருகின்றன..!!
---------------------------------------------
நீதி தேவதையின் கண்களில் கட்டியிருக்கும் கருப்புத் துணி எதற்காக தெரியுமா?
யார் நம் முன்னே இருக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், சட்டப்படி நியாயப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால் இந்த நீதிபதிகள் எப்படி தெரியுமா?
முதலில் அந்த கருப்புத் துணியை நீக்கி, யார் சம்பந்தப்பட்ட வழக்கு?
யார் வழக்கறிஞர்?
பசையுள்ள வழக்கா?
பசையில்லாத வழக்கா?
வழக்கறிஞர் என்ன ஜாதி?
வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்ன ஜாதி?
வழக்கறிஞர் எந்த கட்சி?
சம்பந்தப்பட்டவர் எந்தக் கட்சி? என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்து ஒரு முடிவை எடுத்த பிறகே, வழக்கு குறித்து யோசிப்பார்கள்.
அதற்குப் பிறகுதான் சட்டப் புத்தகத்தையே திறப்பார்கள்.
ஏற்கனவே எடுத்து வைத்த முடிவின்படி, அதற்கு ஏற்றார்ப் போல தீர்ப்புகளைத் தேடுவார்கள்.
வழக்கறிஞர் செல்வாக்கான வழக்கறிஞராக இருந்தால், தனிப்பட்ட முறையில் பேசி டீலிங்கை முடிப்பார்கள். இவையெல்லாம் திரைக்குப் பின்னால் நடப்பவை.
நீதிமன்றத்தில் பார்க்க வேண்டுமே… அய்யய்யய்யோ… அப்படி ஒரு மயிர் கூச்செறியும் விவாதம் நடக்கும். சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து வருவார்கள். சட்டப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வரியையும் எத்தனை நுணுக்கமாக அலச முடியுமோ அத்தனை நுணுக்கமாக அலசுவார்கள்.
இந்த பேரங்கள், டீலிங்குகளில் ஈடுபடாதவர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கணக்கு எடுத்தால் விரல் விட்டு எண்ணக் கூடிய நீதிபதிகளே தேறுவார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.
9. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[17 February 2016] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43143
அஸ்ஸலாமு அலைக்கும்
முதலில் நாம் >> KEPA << அமைப்பினர்கள் யாவர்களையும் மனதாரவே பாராட்டனும் ....நம் மக்களின் உடல் நலத்துக்காக எவ்வளவு தூரம் போராடினார்கள்...இவர்களின் '' தியாகமே '' நமக்கு முதலில் ஒரு வெற்றி தான் ... அல்லாஹ் இந்த அமைப்பினர்களை எப்போதும் சிறப்பாக்கி அருள்வானாகவும் ஆமீன்.......அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்ச்சிகளிலும் முழுமையான வெற்றியை நமக்கு தந்தருள்வானகவும் ஆமீன்.......
தீர்ப்பின் முடிவு நம் ஊர் மக்களை கொஞ்சம் திகைப்படைய வைத்தாலும ......இருப்பினும் மேல் முறையிடு செய்ய நமக்கு அதிகம் வாய்ப்புக்கள் உள்ளன .....இன்ஷா அல்லாஹ் அதை நம் மரியாதைக்குரிய >> KEPA << பொது நல அமைப்பினர்கள் முறையாகவே செய்வார்கள் ...என ..யாவர்களும் எதிர்பார்க்கிறார்கள் .....
பல வருடங்களாக நடந்த & நடந்து முடிந்த ஒரு சில அரசியல் கட்சிகளுக்கான தீர்ப்பு கூட,, திடிரென்று வேறு கோர்ட்டு மூலமாக மாறியதையும் நாம் அறிவோம்.அது போலவே நமக்கும் நடக்கலாம்.நம் அனைத்து மக்களின் & துவாவும் இன்ஷா அல்லாஹ் .... கபுலாகும்.
இன்ஷா அல்லாஹ், மேல் முறையிட்டு மூலம் நம் உச்ச நீதி மன்ற தீர்ப்பு நம் ஊர் மக்களின் உயிருக்கு பாதுகாப்பாக நல்லதோர் தீர்ப்பாக வரலாம்.உண்மையும் , மக்களின் உயிரின் பாதுகாப்பும் எப்போதும் தோற்காது . நிச்சயம் வெல்லும் .
நம் ஊர் மக்களின் ஒற்றுமையான போராட்டத்தில் தான் வெற்றி நிச்சயம் உண்டு. தயவு செய்து நம் மக்கள் இந்த ஒரு விசையத்தி லாவது ஒற்றுமையை கடை பிடித்து KEPA பொது நல அமைப்பினர் களுடன் இணைந்து செயல் படுவோம் என்று சபதம் எடுக்க வேணும் .
நம்மில் எந்த ஒரு ஒற்றுமையும் இல்லாமையால் தான் நாம் எடுக்கும் அனைத்து முயற்ச்சிகளும் பின்னடைகிறது .இன்ஷா அல்லாஹ் நாம் ஒற்றுமை அடைவோம்.வெற்றி கண்வோம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross