காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி 17, 2003 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 338]
திங்கள், பிப்ரவரி 17, 2003
ஜெயலலிதா வருகை! போலீஸ் குவிப்பு!!
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
சாத்தான்குளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா 1 வாரம் சுற்றுப்பயணம் செய்கிறார். நேற்று 16-2-2003 ஞாயிற்றுக்கிழமை காலை தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகை தந்து அங்கிருந்து டி.சி.டபிள்யூ. விருந்தினர் மாளிகையில் தங்கினார். பிறகு சாத்தான்குளம் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். அவர் பிரச்சாரம் செய்யும் 1 வாரமும் ட.சி.டபிள்யூ.விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய போலீஸ் அதிகாரிகள் காயல்பட்டினத்தில் தங்கியுள்ளனர். 100க்கும் மேற்பட்ட போலீஸார் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
|