விரைவில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் SDPI கட்சி போட்டியிட வேண்டுமென, அக்கட்சியின் தலைமைக்கு, தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கோரிக்கை வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம், 13.02.2016. சனிக்கிழமையன்று, கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட தலைவர் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் ஐ.உஸ்மான் கான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாவட்ட துணைத்தலைவர் முஹம்மத் அலீ, மாவட்ட பொருளாளர் எம்.மைதீன் கனீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எச்.ஷம்சுத்தீன் வரவேற்றுப் பேசினார்.
இக்கூட்டத்தில், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழுவை நியமித்தும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட கட்சி தலைமையை வலியுறுத்தியும், சேதமுற்று நீண்ட காலமாகியும் இதுவரை சரி செய்யப்படாமலிருக்கும் திருச்செந்தூர் - தூத்துக்குடி மாநில நெடுஞ்சாலையை விரைந்து சரி செய்யக் கோரியும், தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் மாசு குறித்து மாதந்தோறும் ஆராய சிறப்புக் குழுவை நியமிக்க தமிழக அரசைக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
SDPI / PFI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |