காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் விளையாட்டு விழா, ஆண்டு விழா ஆகியன - பள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளுடன் நடைபெற்றுள்ளது. விரிவான விபரம்:-
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் பெற்றோர் நாள் விழா, ஆண்டு விழா, விளையாட்டு விழா ஆகியன, 01.02.2016. முதல் 03.02.2016. வரை பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.
பெற்றோர் நாள் 8ஆவது விழா, 01.02.2016. அன்று 09.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற்றது. பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவி ஃபாத்திமா முனவ்வரா கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
ஆறுமுகநேரி Life Improvement Mind Engineer (LIME) அமைப்பின் நிறுவனர் ஆர்.கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினார்.
பள்ளியின் 20ஆம் ஆண்டு விழா 02.02.2016. அன்று 16.00 மணியளவில் நடைபெற்றது. பள்ளியின் நிறுவனர் எஸ்.அக்பர்ஷா தலைமை தாங்கினார். 12ஆம் வகுப்பு மாணவி சேகு ஜாபிரா கிராஅத் ஓதி துவக்கி வைத்தனர். 12ஆம் வகுப்பு மாணவி ஃபாத்திமா முனவ்வரா வரவேற்புரையாற்றினார். 11ஆம் வகுப்பு மாணவியரான சிராஜ் முவஃப்பிகா, எம்.மஃப்ரூஹா ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர்.
திருச்செந்தூர் அனிதா குமரன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிர்வாக அதிகாரி பீ.கண்ணபிரான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியின் முதுநிலை ஆசிரியர் எச்.விஜிலா கண்ணபிரான் பரிசுகளை வழங்கினார்.
11ஆம் வகுப்பு மாணவி ஜெ.எஸ்.முர்ஷிதா நன்றி கூறினார். பின்னர், மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
03.02.2016. அன்று விளையாட்டு விழா நடைபெற்றது. மாணவ-மாணவியரின் அணிவகுப்பைத் தொடர்ந்து, விளக்கொளி ஏற்றப்பட்டது.
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் எஸ்.ஏ.ஜெபராஜ் ராஜநாயகம் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கொடியேற்றி, வாழ்த்துரையாற்றினார்.
மாணவ-மாணவியரின் விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து, அவற்றில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
11ஆம் வகுப்பு மாணவி முஷர்ரஃபா சுல்தானா வரவேற்றார். 11ஆம் வகுப்பு மாணவி ஷம்ஸ் குரைஷா நன்றி கூறினார்.
அனைத்து விழாக்களுக்கான ஏற்பாடுகளையும், பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் தலைமையில் ஆசிரியையர், அலுவலர்கள் செய்திருந்தனர்.
எல்.கே.மெட்ரிக் பள்ளியில் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆண்டு விழா, விளையாட்டு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|