காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி 19, 2011 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 5686]
சனி, பிப்ரவரி 19, 2011
தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயர்! இன்று விழா!!
செய்தி: காயல்பட்டணம்.காம்
தூத்துக்குடி துறைமுகத்தை வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் என பெயர் சூட்டும் விழா இன்று (பிப்ரவரி 19) தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் நடக்கிறது.
விழாவில், வ.உ.சிதம்பரனாரின் வழித்தோன்றல்கள், தியாகிகள் கெளரவிக்கப் படுகின்றனர். நாளை மாலை 3 மணி முதல் 5 மணி வரை விடுதலைப் போராட்டத்தில் வ.உ.சி.யின் பங்களிப்பு நாட்டுப்புற கலைகள் மூலம் விளக்கி கூறப்படும். கலைநிகழ்ச்சிகளில் சென்னை கலாகேந்திரா, பவளம் கலைக்குழுவினர், வ.உ.சி. கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கின்றனர்.
விழாவில், அமைச்சர் கீதாஜீவன், ஜெயதுரை எம்பி முன்னிலை வகிக்கின்றனர். மத்திய அமைச்சர் வாசன் துறைமுகத்திற்கு வஉசி பெயர் சூட்டி சிறப்புரை ஆற்றுகிறார். இதில் மத்திய கப்பல்துறை செயலாளர் மோகன்தாஸ், துறைமுக பொறுப்புக்கழக தலைவர் சுப்பையா மற்றும் துறைமுக சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். பின்னர், வ.உ.சியின் வரலாறு, தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சி குறித்து அமைக்க்பபட்டுள்ள மியூசியத்தை திறந்து வைக்கிறார்.
|