காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண் 278 இடத்தில் - பயோ காஸ்
திட்டம் அமைக்கவும் மற்றும் அவ்விடத்தில் நகரில் உருவாகும் திடக்கழிவுகளை கொட்டுவது எனவும் நகர்மன்றம் தீர்மானம்
நிறைவேற்றியிருந்தது.
கடந்த மார்ச் மாதம், முறையான அனுமதி பெறாமல் துவக்கப்பட்ட இந்த திட்டங்களை எதிர்த்து - கொம்புத்துறை ஊர் நலக் குழு மற்றும்
கொம்புத்துறை சதுப்பு நிலக் காடுகள் பாதுகாப்பு குழு ஆகியவை இணைந்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல கிளையில் தொடர்ந்த
வழக்கில் (Appeal No.100/2015 [SZ]), மே 21 அன்று தடையாணை வழங்கப்பட்டது.
இந்த தடையாணையை தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், அவ்விடத்தில் பயோ காஸ் திட்டம் அமைக்கவும், குப்பைகளை
கொட்டவும் அனுமதிகளை வழங்கியது.
இவ்வழக்கின் வாதங்கள் செப்டம்பர் 9 அன்று நிறைவுற்றன. தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு
ஒத்திவைக்கப்பட்டது.
ஜனவரி 25 அன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் - திட்டத்திற்கு பயன்படுத்தப்படவுள்ள இடம்
(278/1B) - அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்துள்ள அறிக்கைப்படி, CRZ எல்லைக்கு வெளியே உள்ளதால், 2011ம் ஆண்டு CRZ
விதிமுறைகளுக்குள் (CRZ NOTIFICATION 2011) வராது எனவும், இந்த திட்டம் மத்திய அரசின் ENVIRONMENTAL IMPACT ASSESSMENT, 2006
விதிமுறைகள் உட்பிரிவு 7(i) சரத்திற்கு கீழும் வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பின் முழு விபரம் கீழே வழங்கப்பட்டுள்ளது:
தீர்ப்பை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்
|