சஊதி அரபிய்யா - ரியாத் வாழ் அஸ்ஹர் ஜமாஅத்தின் கலந்தாலோசனைக் கூட்ட விபரங்கள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அரும்பெரும் கிருபையினால் சவுதி அரேபியா ரியாத்நகரிலுள்ள காயல் அஸ்ஹர் ஜமாஅத்தின் (அல் ஜாமியுல் அஸ்ஹர், அன்னை ஆயீஷா சித்தீகா மகளிர் கல்லூரி உள்ளடக்கிய) கலந்தாலோசனைக் கூட்டம், 19/02/2016 வெள்ளிக்கிழமையன்று இஷா தொழுகைக்குப் பின்னர், சகோதரர் ஹைதர் அலீ அவர்கள் இல்லத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இக் கூட்டத்திற்கு சகோதரர் சாதுலி அவர்கள் தலைமையேற்றார்கள். ஆரம்பமாக இறைமறையின் இனிய வசனத்தை மௌலவி சல்மான் பார்சி சிராஜி ஓதி துவக்க அதனைத்தொடர்ந்து, இக்கூட்டத்தின் நோக்கத்தினை சகோதரர் ஹைதர் அலீ அவர்கள் விளக்கினார்கள் மேலும் அதிகமான சகோதரர்களும் பல புதிய முகங்களும் வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகும் இனி வரும் காலங்களில் தொய்வின்றி நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக் கொண்டார்கள். அதனை தொடர்ந்து ஊரில் இருந்து வருகை தந்துள்ள ஜனாப். இப்னு சவூத் அவர்களிடம் அல் ஜாமியுல் அஸ்கர் மற்றும் ஆயிஷா சித்திக்கா அரபிக் கல்லூரி பற்றிய தற்போதைய நிலவரங்களை அறிய தருமாறு கேட்டுக்கொண்டார்.
சகோதரர் இப்னு சவூத் தனது உரையில் 14/02/2016 அன்று அல்ஜாமிவுல் அஸ்ஹரில் "நீங்களும் சாதிக்கலாம்" என்ற பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இந்நிகழ்ச்சியை நடத்த திறமையாக செயல்பட்ட அல் ஜாமியுல் அஸ்கர் இளைஞர் குழுவை மனதார பாராட்டினார். மேலும் அவர்கள் பேசுகையில் ஒழு செய்யும் கவுஸ் மற்றும் பெண்களுக்கான கழிப்பிட கட்டுமான வேலைகள் முடியும் தருவாயில் இருப்பதாகவும், மைக் & ஸ்பீக்கர் (சவுண்ட் சிஸ்டம்) சரியாக இல்லாததால் அதனை மாற்றும் வேலையில் இருப்பதாகவும் கூறினார். மேலும் பள்ளிக்கு குளிர்சாதன வசதி ஏற்பாடு செய்ய திட்டமிட்டு விரைவில் குளிர் சாதன பெட்டிகள் பொறுத்தப்படும் எனவும் அதற்கு தேவையான செலவினங்களில் ரியாத் சகோதரர்களும் தங்களின் பங்களிப்பு செய்ய இருப்பதை அறிந்து நன்றியை தெரிவித்தார். அடுத்ததாக பள்ளியில் முகப்பில் பெயின்ட் போன்ற வேலைகள் தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.
மேலும் பள்ளிக்கு மினாரா வைப்பதில் சற்று கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில் ரியாத் சகோதரர்களிடம் அதை பற்றிய கருத்தை கேட்கும் பொழுது, ரியாத் சகோதரர்கள் பள்ளிக்கு மினாரா தேவை என்ற கருத்தை முன் வைத்தார்கள். அதை அஸ்கர் செயற்குழுவில் பரிசிலனை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதை செயற்குழுவில் பேசி முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் பள்ளியின் மேல் தளத்தில் நூலகம் அமைத்திருப்பதாகவும் அதை மேலும் உபயோகம் படுத்த ஆன்லைன் குரான் கல்வியை மதீனா பல்கலை கழகம் மூலம் செயல்படுத்த திட்டம் இருப்பதாகவும் கூறினார். மக்தப் மற்றும் தீனியாத் வகுப்புகள் நன்றாக செயல்படுவதாகவும் கூறினார் அதனை தொடர்ந்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து மேலும் தரமான ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரியாத் அஸ்கர் ஜமாஅத் வைத்து அதற்கான செலவினங்களில் ஒரு பகுதி தர தயாராக இருப்பதாகவும் கூறினார்கள்.
மேலும் பள்ளியின் கட்டுமான பணிகள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் அதற்க்கு பிறகு ஒரு பெரிய அளவில் ஒரு மார்க்க நிகழ்ச்சி நடத்த திட்டம் உள்ளதாகவும் கூறினார்.
ஆயிஷா சித்திக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி அல்லாஹ்வின் பேரருளாலும் , அபுல்ஹசன் கலாமி அவர்களின் மேற்பார்வையிலும், ஆசிரியைகள், ரகீபாக்களின் ஒத்துழைப்போடும் சிறப்பாக நடைபெறுவதாக கூறினார். ஏறத்தால 300 மாணவிகள் கல்லூரியில் பல பிரிவுகளில் சேர்ந்து பயின்று வருவதாக கூறினார். கிட்டத்தட்ட 230 மாணவிகள் ஹாஸ்டலில் தங்கி பயின்று வருவதாகவும் கூறினார். கல்லூரி வளாகத்திலும், ஹாஸ்டல் வளாகத்திலும் சவுண்ட் சிஸ்டம் சரியாக இல்லாததால் அஸ்கர் பள்ளிக்கு வந்த சவுண்ட் நிபுணரிடம் ஆலோசனை பெறப்பட்டு அதன் அடிப்படையில் சரிசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மாணவிகளிடம் வசூலிக்கப்படும் மாத கட்டணம் ரூபாய் 2000 செலவினங்களுக்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் வரும் வருடத்தில் இருந்து அதை அதிகரிக்க ஆலோசனை கூறினார்.
சகோதரர் ஹைதர் அலி அவர்கள் பல்கலை கழகங்களின் தொலை தொடர்பு கல்வி மையம் நமது வளாகத்தில் அமைப்பது பற்றி கேட்டார் அதற்கு பதில் அளிக்கையில் அப்படிப்பட்ட திட்டத்தை விரைவில் அமுல் படுத்த முயற்சி செய்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார். இது போன்ற காரியங்களுக்கு ஊரில் உள்ள இளைஞ்சர்கள் ஒத்துழைப்பை கோரும் படி கூட்டத்தினர் கூறினர். மேலும் பழைய கட்டுமான பகுதியில் சில பழுது பார்க்கும் வேலைகள் இருப்பதாக கூறினார்.
அதனை அடுத்து ஜன்சேவா பற்றிய சில கருத்துகளை கூட்டத்தினர் கேட்டதற்கு பதிலளிக்கையில் காயல்பட்டினம் ஜன்சேவா சிறப்பான முறையில் செயல்படுவதாகவும் கூறினார். மேலும் இந்த வருடத்தில் கிட்டத்தட்ட 500 நபர்களுக்கு வட்டியில்லா கடன் உதவி செய்து அவர்களை வட்டியின் பக்கம் செல்லாமல் தடுத்ததாகவும், 92 சதவிகிதம் கொடுக்கப்பட்ட கடன்கள் அடைக்கப்பட்டதாகவும் அதில் 4 சதவிகிதம் லாபம் கிடைத்ததாகவும் கூறினார். வருகிற மார்ச் 20 ஆம் தேதி மதுரையில் வைத்து "ஜன்சேவா - வட்டி இல்லா தமிழகத்தை நோக்கி" என்ற தலைப்பில் ஜன்சேவா, பைத்துல்மால் போன்ற அமைப்புகளோடு ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு கூட்டம் (மாநாடு) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதன் முன்னோட்டமாக வருகிற 11/03/2016 ரியாதில் வைத்து ஒரு சிறப்பு கூட்டம் நடத்த இந்த சபையில் முடிவு எடுக்கப்பட்டது. மறைந்த சகோதரர் மக்கி அவர்கள் ஆற்றிய பணி அளப்பெரியது என்று கூட்டத்திற்கு வந்தவர்களால் பேசப்பட்டு அவர்களின் நற்பதவிக்காக துஆவும் செய்யப்பட்டது.
இக் கூட்டத்திற்கு சகோதரர் ஹைதர் அலி, சகோதரர் அபூபக்கர், சகோதரர் அமீர் ஹுமாயுன் மற்றும் சகோதரர் அமீர் ஷாகுல் அவர்கள் உடைய அனுசரனையில் இரவு உணவு வழங்கப்பட்டது.
இறுதியாக கஃபாரவுடன் கூட்டம் நிறைவுப்பெற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாதிலிருந்து...
தகவல் & படங்கள்:
அபூபக்கர் ஸித்தீக்
ரியாத் அஸ்ஹர் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|