தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா பொதுக்குழுக் கூட்டத்தில், அம்மன்றத்திற்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பொதுக்குழுக் கூட்டம் குறித்து, மன்றத்தின் புதிய செயலாளர் எம்.எச்.அபுல் மஆலீ வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
அல்லாஹ்வின் கிருபையால் தக்வாவின் வருடாந்திர நிறைவு பொதுக் கூட்டம் 17-02-2016 புதன் பின்னேரம் 8 மணியளவில் BGH இல்லத்தில் நடைபெற்றது. தலைவர் வாவு எம்.எம்.சம்சுத்தீன் ஹாஜி அவர்கள் தலைமை வகித்தார்கள். ஹாஜி கே.எம்.ஏ.மீரா சாஹிபு முன்னிலை வகித்தார்கள்.
ஹாபிழ் எம்.ஏ.மீரா சாஹிபு கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள். ஹாஜி டபிள்யு.எஸ்.மொகுதூம் முஹம்மது வரவேற்புறை நிகழ்த்தினார். தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.சம்சுத்தீன் அவர்கள் கடந்த 17 ஆண்டுகளாக தக்வா ஆற்றியுள்ள பணிகளையும் தொடர்ந்து செய்யவிருக்கும் பணிகளையும் நினைவு கூர்ந்து பேசினார்.
தொடர்ந்து 2013-2016 பருவத்திய அறிக்கையை பொருளாளர் என்.எஸ்.ஹனிபா வாசித்துக் காட்டி அங்கத்தினர்களின் ஐயங்களுக்கும் தெளிவு செய்து விளக்கிய பின் நிதி அறிக்கையை இம் மன்றம் ஏற்றுக் கொண்டது.
அடுத்து சிறப்புறையாற்றிய ஆலிம் மௌலவி எம்.ஏ.எஸ்..பர்ஹான்; அவர்கள் காயல் மக்களின் சேவைகளையும், தக்வாவின் சேவைகளையும் பாராட்டிப் பேசினார்.
இறுதியாக பேசிய செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யது முஹம்மது அவர்கள் தக்வாவில் தான் பணியாற்றியது சிறிதளவுதான் என்றாலும் மிகவும் மனநிறைவைத் தந்ததாக கூறினார்.
கீழ்க்கண்ட 9 நபர்கள் தக்வாவின்; புதிய நிர்வாகிகளாகவும் மேலும் 12 நபர்கள் செயற்குழு உறுப்பினர்களாகவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்:-
தலைவர்:
ஹாஜி வாவு எம்.எம்.சம்சுத்தீன்
துணைத் தலைவர்கள்:
ஹாஜி கே.எம்.எஸ்.முஹம்மது இபுறாஹீம்;;
ஹாஜி விளக்கு நூர் முஹம்மது
தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட தக்வாவின் செயலாளர் ஹாஜி எம்.எச்.அபுல் மஆலி தன்னைத் தேர்ந்தெடுத்து பணியாற்ற ஒரு வாய்ப்பு தந்தமைக்கு இம்மன்றத்திற்கு நன்றி கூறினார்.
மேலும் இம்மன்றத்தில் பணியாற்றிய பழைய செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்றைய கூட்டத்தை தலைமை ஏற்றும் முன்னிலை வகித்தும் சிறப்புறை ஆற்றியும் நிதியறிக்கiயை சமர்ப்பித்தும் சிறப்பித்த அனைவருக்கும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவின்ற பின் ஷாதுலி ஆலிம் துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது. இக்கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாங்காக்கிலிருந்து...
தகவல் & படங்கள்:
‘கம்பல்பக்ஷ் S.A.அஹ்மத் இர்ஃபான்
தக்வாவிற்கு இதற்கு முன் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தக்வாவின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தக்வா பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்ய பட்டார்கள் , அல்லாஹ் உதவியால் பொறுப்பு வகிபவர்கள் ,அவர்களுடைய பொறுப்பு படி நடக்க அல்லாஹ் உதவி செய்வானாக ,
பொறுப்பை புரிந்து கொண்டு பொறுப்பு படி நடக்க வல்ல ரப்புல் ஆளாமீன் துணை புரிவனாக
2. வாழ்த்துக்கள்........ posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh (KSA))[25 February 2016] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43217
அஸ்ஸலாமு அலைக்கும்
தக்வாவின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.
செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எமது அருமை நண்பர் ஹாஜி எம்.எச்.அபுல் மஆலி அவர்கள் 90-களில் தைக்கா தெருவை சேர்ந்த இளைஞர்களால் துவக்கப்பட்ட WAY (Welfare Association of Youth) அமைப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு பல சமூக சேவைகளை செய்தவர்.
அன்றைய காலக்கட்டத்தில் பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே இரத்த தானம் செய்ய மிகவும் தூண்டுதலாய் இருந்தவர். அவருடைய பணி மென்மேலும் சிறக்க உளமார வாழ்த்துகின்றோம்.
இப்படிக்கு
தைக்கா தெரு நண்பர்கள் சங்கம் (முக புத்தக குழு)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross