காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) சார்பில் நடத்தப்பட்ட தஃவா தர்பிய்யா வகுப்பு குறித்து, அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
அல்லாஹ்வின் பேருதவியால் கடந்த நான்கு வருடங்களாக நமது தஃவா சென்டர் சார்பாக நடத்தப்பட்டு வரும் பிறமத சகோதரர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது? என்ற தஃவா & தர்பிய்யா பயிற்சி வகுப்பானது தற்போது நான்கு Batch ஏக இறைஅருளால் சிறப்புற நடைபெற்று வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.
இதன் தொடர்ச்சியாக 5rd Batch-ன் 5ஆம் வகுப்பு "இஸ்லாம் அறியா முஸ்லிம்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது?" என்ற தலையங்கத்தில் கடந்த 22.02.2016 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
முதலில் காலை 09மணி முதல் 10மணி வரை மாணவ / மாணவியர்- -களுக்கான சென்ற வகுப்பினை நினைவூட்டும் விதமாக தேர்வும் நடத்தப்பட்டது. "இஸ்லாம் அறியா முஸ்லிம்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது?" என்ற வகுப்பை நடத்தித்தந்திட பிர்தௌஸியா கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் நாகர்கோவிலை சார்ந்த மெளலவி. காஜா மெய்தீன் பிர்தௌஸி அவர்கள் வருகை தந்திருந்தார்கள்.
அல்லாஹ்வின் பேருதவியால் வகுப்பு காலை 10 மணி முதல் 1 வரை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய வரலாற்றில் எங்கிருந்து ஷிர்க் மற்றும் குழப்பங்கள் உருவானது என்றும் பின் வகுப்பிற்க்காக தொகுக்கப்பட்ட கேள்விகளுக்கும் விடைஅளித்தார்கள். அவை பின்வருமாறு ................
General Questions
1. மீலாது வீழா, பிறந்த நாள் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?
2. தர்கா வழிபாடு பற்றி குர்ஆன் , ஹதிஸ் கூறுவதென்ன?
3. முரீது, ஷைக் பீர் என்று அழைத்து சிலரிடம் பைஅத் வாங்கி சிலர் தனிக் கூட்டமாக திரிகின்ற்னரே, இவர்கள் யார்? இவர்களிடம் எவ்வாறு தஃவா செய்வது?
4. முஹம்மது நபியின் வாரிசுகள் என்று கூறி தங்களிடம் சில மறைத்து வைக்கப்பட்ட இரகசியம் இருப்பதாக கூறுகின்ற்னரே! இதன் உண்மை நிலை என்ன?
5. ’’மெளலூது ஒதுவது பித்அத்’’ என்பதை எவ்வாறு எத்திவைப்பது?
6. மாற்று மத கலாச்சரத்துடன் கலந்து அவர்களின் கொள்கை(வட்டி வாங்கலாம், கடவுளுக்கு படைத்தை சாப்பிடலாம்)யை பின்பற்றுபவனிடம் எவ்வாறு தஃவா செய்வது?
7. ஸீஃபிசம் எந்த கொள்கையை உள்ளடக்கியது? இன்றைய முஸ்லிம்கள் ஸீஃபிசத்தால் தான் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்பது உண்மையா?
8. மத்ஹபுகள் எவ்வாறு உருவாகியது? ஒரு முஸ்லிம் ஏதேனும் மத்ஹபில் கண்டிப்பாக இருக்க வேண்டுமா?
போன்ற கேள்விகளுக்கு மாணவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் இஸ்லாமிய வரலாறுடன் தெளிவாக விளக்கம் தந்தார்கள். அதனை தொடர்ந்து மாணவ / மாணவியர்களின் சந்தேகத்தை நீக்கும் வண்ணம் கேள்வி-பதில் நிகழ்ச்சி 02.20 முதல் 03.30வரை நடைபெற்றது.
பின்பு மதியம் 3.30 முதல் அஸர் வரை துஆ மனனம் வகுப்பை சகோ.அன்சாரி அவர்கள் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து தாய்யிகளாக பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் தங்கள் உள்ளதை தூய்மை படுத்திக் கொள்ளும் பொருட்டு மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ”இஸ்லாம் காட்டித்தரும் நற்கூலிகளை பெறக்கூடிய நற்பண்புகள்” எனும் தலைப்பில் மெளலி. காஜா மெய்தீன் பிர்தௌஸி அவர்கள் நடத்தினார்கள்.
மாலை 5.30 மணி முதல் தாய்யிகளுக்கான பேச்சு பயிற்சியில் சென்ற வகுப்பில் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகளில் இன்று சிறிது நேரம் உரையாற்றினார்கள்.
இறுதியாக கப்பாராஉடன் வகுப்பு இனிதே முடிவு நடைபெற்றது. வல்லோன் அல்லாஹ்வுக்கே வான் புகழ் உரித்தாகட்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஃவா சென்டர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|