ஐக்கிய அரபு அமீரக அஸ்ஹர் ஜமாஅத் செயற்குழுக் கூட்டத்தில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ பங்கேற்று உரையாற்றினார். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
அமீரகத்தில் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஃகத்தீப் மவ்லவி அப்துல் மஜீத் மஹ்ழரீ சொற்பொழிவு! காயல் அஸ்ஹர் ஜமாஅத் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பு!!
ஐக்கிய அரபு அமீரகம் வருகை புரிந்திருந்த அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் தலைமை ஃகத்தீபும், ஆயிஷா ஸித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவி அப்துல் மஜீத் மஹ்ழரீ அவர்கள் காயல் அஸ்ஹர் ஜமாஅத் அமீரகம் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
கடந்த 12.02.2016 வெள்ளிக்கிழமை அன்று ஜமாஅத்தின் தலைவர் விளக்கு தாவூது ஹாஜி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு பொறியாளர் மக்பூல் அஹமத் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சித் தலைவரின் கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. செயற்குழு உறுப்பினர் சகோ. மீரா சாகிப் அவர்கள் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
ஃகத்தீப் அவர்கள் சிறிது நேரம் அமீரகத்தில் இயங்கி வரும் காயல் அஸ்ஹர் ஜமாஅத்தின் செயல்பாடுகள் குறித்து தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்கள். தனித்து செயல்படாமல் மற்ற ஊர் ஜமாஅத்துகளுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
அமீரகத்தில் காயல் அஸ்ஹர் ஜமாஅத்தின் பணிகளை எவ்வாறு விரிவு படுத்தலாம் என்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
எதிர்வரும் மார்ச் 18ம் தேதி இன்ஷா அல்லாஹ் காயல் அஸ்ஹர் ஜமாஅத் அமீரகத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை துபை அல் துவார் பூங்காவில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
மஃக்ரிப் இடைவேளைக்குப் பிறகு மவ்லவி அப்துல் மஜீத் மஹ்ழரீ அவர்களின் பயான் நடைபெற்றது. “அல்லாஹ்வின் அருட்கொடைகள்” என்ற தலைப்பில் இரத்தினச் சுருக்கமாக மவ்லவி அவர்கள் அழகிய உரை ஒன்றை வழங்கினார்கள். உரைக்குப் பிறகு உறுப்பினர்களின் மார்க்க சந்தேகங்களுக்கு மவ்லவி அவர்கள் விளக்கமளித்தார்கள்.
முன்னதாக ஃகத்தீப் அவர்கள் அபூதாபியில் சொற்பொழிவாற்றினார்கள். 11.02.2016 வியாழனன்று விளக்கு டாக்டர் செய்து அஹமத் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மவ்லவி அவர்களை சந்திக்கும் நிகழ்ச்சியாகவும் அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் இம்மை-மறுமை வாழ்வியலை அழகுற வடிவமைப்பதின் அவசியத்தை மிகச் சிறப்பான முறையில் ஃகத்தீப் மவ்லவி அவர்கள் சொற்பொழிவாக வழங்கினார்கள்.
இறுதியாக கலந்து கொண்ட சகோதரர்களின் மார்க்க சந்தேகங்களுக்கு மவ்லவி அவர்கள் பதில் பகர்ந்தார்கள். பின்னர் துஆ கஃப்பாராவுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
நிகழ்ச்சியை பொறியாளர் மக்பூல் அஹமத், சகோ. துனி M.O. அன்சாரீ, சகோ. இஸ்மாயீல் மற்றும் டாக்டர் செய்து அஹமத் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
‘துணி’ முஹம்மத் உமர் அன்ஸாரீ
அமீரக அஸ்ஹர் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross