காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி 22, 2009 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 2741]
ஞாயிறு, பிப்ரவரி 22, 2009
புற்று நோய் விழிப்புணர்வு: கத்தர் காயல் நல மன்றம் அறிக்கை!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
காயல்பட்டணத்தில் பெருகி வரும் புற்றுநோய் குறித்து உடனடி விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க வேண்டுமென அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் வேண்டுகோள் விடுத்து கத்தர் காயல் நல மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மன்றத்தின் தலைவர் ஹாஜி ஃபாஸ{ல் கரீம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
காயல்பட்டணத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. கருப்பைப் புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்ற பெயரில் இவ்வுறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுவோர் எண்ணிக்கையும் நமதூரில் அன்றாடம் அதிகரித்தவண்ணம் உள்ளது.
புற்று நோயின் இந்த அசுர வளர்ச்சிக்கு, அருகிலுள்ள தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள், கைப்பேசி கோபுரங்கள் (Mobilie Phone Towers), செயற்கை உணவுகள் என பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.
இன்று ஒரு தெருவில் குறைந்தபட்சம் 5 பேராவது இந்நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, பெற்று வரும் சிகிச்சை காரணமாக தம் தலைமுடி, முக அழகு என அனைத்தையும் இழந்து, வெளியில் மக்களோடு மக்களாக இருப்பதற்கு வெட்கப்பட்டு, தம் வாழ்வின் கடைசிப் பகுதியை எதிர்பார்த்து தம் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பரிதாமான நிலை இருந்து வருகிறது.
இதுகுறித்து இப்போதே காலம் கடத்தாமல் விழிப்புணர்வு கொள்ளத் தவறினால், விரைவில் நமதூர் மக்கள் தொகையில் பாதி அளவு மக்கள் இந்த உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, அனைத்து காயல் நல மன்றங்களும் இதுகுறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு, தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை இணைந்து எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. வரும் விடுமுறை காலத்தில், இதுகுறித்த ஒரு சிறப்பு செயல்திட்டத்தோடு வருவதற்குத் தோதுவாக இப்போதே உலகின் அனைத்து காயல் நல மன்றங்களும் இணைந்து கலந்தாலோசனை செய்யுமாறு கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்த முறையான மடல் எம் மன்றம் மூலம் விரைவில் அனைத்து மன்றங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
-இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
|