காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி 21, 2008 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 1573]
வியாழன், பிப்ரவரி 21, 2008
கடற்கரையில் ஆவின் பாலகம், ஐஸ்கிரீம் பார்லர் திறப்பு!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் 6 பகுதிகளில் ஆவின் பாலகம் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் காயல்பட்டணம் கடற்கரையில், வளர்பிறை மகளிர் சுயஉதவிக்குழுவிற்காக ஆவின் பாலகம் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 15.02.2008 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் முக்கிய நிர்வாகி ஹாஜி எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாயீல் (முத்து ஹாஜி) தலைமை தாங்கினார். நெல்லை ஆவின் விற்பனைப் பிரிவின் துணைப் பொது மேலாளர் எம்.வி.அமல்ராஜ் வரவேற்புரையாற்றினார்.
நெல்லை ஆவின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சி.சிராஜ் பாலகத்தைத் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்ட சுனாமி உதவித்திட்ட அலுவலர் பி.சோமமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.
காயல்பட்டணம் நகர்மன்றத் துணைத்தலைவர் சி.எஸ்.சதக்கத்துல்லாஹ் முதல் விற்பனையைத் துவக்க, காயல்பட்டணம் குருவித்துறைப் பள்ளியின் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.கபீர் முதல் விற்பனையைப் பெற்றுக்கொண்டார்.
ஹாஜி என்.டி.முஹம்மத் இஸ்மாயீல் நன்றியுரைக்குப் பின், ஹாஜி ஏ.ஹெச்.அமானுல்லாஹ்வின் துஆவுடன் விழா நிறைவுற்றது.
கடற்கரையில் துவங்கப்பட்டுள்ள ஆவின் பாலகம் மற்றும் ஐஸ்கிரீம் பார்லர் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
|