காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி 20, 2007 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 751]
செவ்வாய், பிப்ரவரி 20, 2007
அடிக்கல் நாட்டுவிழா!
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகே புதிய பத்திரப்பதிவு அலுவலகம், மின்வாரிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா 19-02-2007 திங்கள்கிழமை நடைபெற்றது.
காயல்பட்டினத்தில் தற்போதுள்ள பத்திரப்பதிவு அலுவலகம் மிகவும் பழுதடைந்துள்ளதால் புதிதாக பத்திரப்பதிவு அலுவலகம் பேரூந்து நிலையம் அருகே கட்டித் தர வேண்டும் என தமிழக அரசை காயல்பட்டினத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் நீண்ட நாள்களாகக் கோரி வந்தனர்.
இது தொடர்பாக காயல்பட்டினம் நகராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து காயல்பட்டினத்தில் புதிதாக பத்திரப்பதிவு அலுவலகம், மின்வாரிய அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.
திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற பத்;திரப்பதிவு, மின்வாரிய அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை செயலாளர் பிரபு சுல்தான் தலைமை வகித்தார். திருச்செந்தூர் வட்டாட்சியர் செல்லப்பா, காயல்பட்டினம் பத்திரப்பதிவு அலுவலக சார்பதிவாளர் தேவராஜ், காயல்பட்டினம் மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் வாவு செய்யது அப்துர் ரஹ்மான் நாட்டினார்.
விழாவில் முஸ்லிம் ஐக்கிய பேரவைத் துணைத்தலைவர் எஸ்.டி.வெள்ளைத்தம்பி, நகராட்சி மன்ற துணைத்தலைவர் சி.எஸ்.சதக்கத்துல்லா, உறுப்பினர்கள் ஜாபர் சாதிக், பரீதா, ஜெய்னம்பு, கசாலி மரைக்கார், திருத்துவராஜ், காசிராஜன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக காயல்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவரும், தி.மு.க.முன்னாள் ஒன்றியச் செயலாளருமான செய்யது அகமது வரவேற்றுப் பேசினார். தி.மு.க.நகரச் செயலாளர் ஜெய்னுலாப்தீன் நன்றி கூறினார்.
|