காயல்பட்டினம் கே.எம்.டீ. மருத்துவமனையில் இரவு நேர அவசர மருத்துவர் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதோடு, தேவைப்படும் பொதுமக்கள் இச்சேவையைப் பயன்படுத்திக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த - மருத்துவமனையின் அறிவிப்பு:-
1. Re:...வெள்ளி விழா பரிசு posted bymackie noohuthambi (kayalpatnam )[23 February 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43209
KMT மருத்துவமனை 1990 ம் மார்ச் 4ம் திகதி அதன் சேவையை ஆரம்பித்தது. சுமார் 25 ஆண்டுகளைக் கடந்து வந்த அதன் பாதை கரடு முரடானது.
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் போற்றுதலும் தூற்றுதலும் வாழ்த்துக்களும் குற்றச்சாட்டுக்களும் தொடர்ந்த காலங்களில் அந்த நிர்வாகம் பொறுமை காத்து, சிலருக்கு விளக்கம் சொன்னார்கள். சிலருக்கு மறுப்பு தெரிவித்தார்கள். சிலர் அதை புரிந்து கொண்டார்கள் சிலர் பிரிந்து சென்றார்கள். என்றாலும் தன்னலமற்ற சேவைகள் தொடர்ந்தது.
நிலவிலும் கூட களங்கம் இருப்பதாக கவிஞர்கள் சொல்வார்கள். அதே போல் இங்கும் குறைகள் கூர்ந்து கவனிப்பவர்களின் கண்களுக்கு பட்டது. அவற்றை அவ்வப்போது சரி செய்து கொள்ள நிர்வாகம் தவறவில்லை. ''ADMIT MISTAKES '' என்ற தாரக மந்திரத்தை அவர்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்டார்கள்.
அதன் விளைவு இந்த 26ம் ஆண்டில் காலெடுத்து வைக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த இரவு நேர ஆம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்திருக்கிறார்கள்.
இரவு நேர அழைப்பு என்பதால் சேவைக் கட்டணத்தை ரூபாய் 600 என்று நிர்ணயித்து இருப்பதை கொஞ்சம் மறு பரிசீலனை செய்யுங்கள். ஏழைகள் தயங்குவார்கள். அவர்கள் இலவசம் என்ற நோய்க்கு அடிமையாகி விட்டார்கள். அதையே வழக்கமாக்கி கொண்டார்கள். ஆட்சியாளர்களும் அதையே ஊக்குவிக்கிறார்கள். என்ன செய்வது.
தொடர்பு எண் கடைசியில் '108' என்று இருப்பது ஞாபகத்தில் வைத்துக் கொள்ள உதவும். தமிழ்நாடு அரசு அந்த எண்ணைத்தான் அவசர சேவைக்கு அழைப்பு எண்ணாக பயன்படுத்துகிறது.
''நலமான வாழ்வு'' நல்ல எண்ணில் இல்லை
நல்ல எண்ணத்தில்தான் இருக்கிறது.
இங்கு பணிபுரியும் செவிலியர்கள் மருத்துவர்கள் அலுவலர்கள் கடைநிலை ஊழியர்கள் எல்லோருக்கும் தன்னலமற்ற நிர்வாகத்துக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்கள் பணி நனி சிறக்க வாழ்த்துக்கள்.
'யார் நோயுறுகிறாரோ அவர் குணமடைகிறார்"அல்ஹம்துலில்லாஹ்.
புதிதுபுதிதாய் கண்டறியப்படும் நோய்களுக்கு நிவாரணம் ஒருபக்கம் கண்டறியப்பட்டாலும் அவை அவசரகாலத்தேவைக்கு மருத்துவமனையைத்தான் அணுகவேண்டும் எனும்நிலைமாறி கருணையின் அடிப்படையில் இல்லத்திற்கேவந்து மருத்துவம்தரத்துவங்கிய அனைத்துமருத்துவத்துறைகளையும் மனமாறப்பாராட்டி நன்றிசொல்வது மனிதஉலகின்கடமை வல்ல இறைவன் உங்களின் சேவைகளைவெற்றியாக்கி தொடர்ந்து களப்பணியாற்ற ஹலாலான எல்லாநிலைகளிலும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பானாக.
கே.எம்.டீ. மருத்துவமனை கால்நூற்றாண்டுகள் கடந்து ஒருமைல்கல்லை அடைந்திருக்கிறது இன்ஷா அல்லாஹ் நம் இம்மருத்துவமனை மருத்துவ உலகின் தாய்மையாக வளர்ந்து செம்மையான சேவையாற்ற இறைவனை வேண்டிக்கொள்வோம் அதோடு நம்மருத்துவமனையின் நலத்திற்காக நமக்குள்ளிருக்கும் எல்லா முரண்களையும் களைவோம்,தூயமையான ஆதரவுகளை என்றென்றும் நிறைவாக கொடுத்துவருவோம் இங்குசேவையாற்றும் அனைவரையும் வாழ்த்தி பிரார்த்தித்து ஊக்குவிப்போம் வல்ல இறைவன் அனைவருக்கும் நலமான,வளமான வாழ்வை நிறைவுகாலம்வரை அமைத்துத்தந்தருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross