ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் பிரபு சுல்தமான் ஜமாலுத்தீனின் தந்தை பிரபு எஸ்.ஜெ.நெய்னா ஸாஹிப் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, துபை காயல் நல மன்றம் சார்பில் அதன் தலைவர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ வெளியிட்டுள்ள அறிக்கை:-
எமது துபை காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர், ஜனாப் பிரபு சுல்தான் அவர்களின் தந்தை - ஜனாப் பிரபு எஸ்.ஜெ.நெய்னா ஸாஹிப், அவர்கள் 20.02.2016. சனிக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் இறைக் கட்டளைப்படி காலமானார் என்ற செய்தியறிந்தோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல ரஹ்மான் மர்ஹும் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களின் நல் அமல்களை ஏற்று உயர்வான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக ஆமீன்
அன்னாரைப் பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் எமது துபை காயல் நல மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.
இம்மாபெரும் இழப்பை பொருந்திக்கொள்ளும் மனவலிமையையும், அழகிய பொறுமையையும் வல்ல அல்லாஹ் அன்னாரின் குடும்பத்தாருக்கு கொடுத்தருள துஆ செய்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபையிலிருந்து...
தகவல்:
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
(செயலாளர் - துபை கா.ந.மன்றம்)
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |