அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழையின்போது, சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கின. அனைத்துலக காயல் நல மன்றங்களின் ஒத்துழைப்புடன், காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) சார்பில், நிவாரண உதவிகள் வழங்கும் திட்டம் நிறைவு செய்யப்பட்டு, மறுவாழ்வு உதவித் திட்டப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கடைசிகட்ட நிதியுதவி 26.02.2016. அன்று வழங்கப்படவுள்ளதாகவும், நிவாரணம் மற்றும் மறுவாழ்விற்காக மொத்தம் 36.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
KCGC சார்பில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான கடைசி கட்ட நிதி உதவி..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ.
சென்னை மழை வெள்ளத்தால் தனது வாழ்வாதாரத்தை இழந்த 37 நபர்களுக்கு ரூ.2.57 லட்சத்திற்கான KCGC CHENNAI FLOOD REHABILITATION FUND DISTRIBUTION - Final Stage. இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை (26-02-2016) அன்று இரவு -6.30 மணி க்கு சென்னை MMDA வில் அமைந்துள்ள
IGC - Islamic Guidance Centre,
O- Block,
MMDA, Near Market,
Chennai-106.
என்ற முகவரியில் வைத்து நிதியுதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற இருப்பதால் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து சகோதரர்களும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
KCGC அமைப்பின் மூலமாக வெள்ள நிவாரண நிதியாக இதுவரை ரூ.36.5 லட்சம அளவிளான நிதியுதவிகள் செய்யப்படுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
தகவல்:
சொளுக்கு முஹம்மத் நூஹ்
KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|