கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், அனுராகம் புத்தக நிலையம் சார்பில் - “எனக்குப் பிடித்த இரண்டு நூற்கள்” எனும் தலைப்பில் - 06 முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ-மாவியருக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.
மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து 310 மாணவ-மாணவியர் பங்கேற்ற இப்போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின்
12ஆம் வகுப்பு மாணவி டீ.மோனிகா ரிம்ஸா முதலிடத்தையும்,
08ஆம் வகுப்பு மாணவி எஸ்.எல்.ஜுலைகா அஃப்ரா இரண்டாமிடத்தையும்,
ஏ.ஏ.சேகு ஸஜீலா (08ஆம் வகுப்பு), எம்.ஏ.ஏ.முஷர்ரஃபா ஸுல்தானா (11ஆம் வகுப்பு), எம்.எஸ்.ஹபீபா (10ஆம் வகுப்பு), எஸ்.எம்.டீ.ஜைனப் தாஹா (06ஆம் வகுப்பு)
ஆகிய மாணவியர் மூன்றாமிடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
முதல் மூன்றிடங்களைப் பெற்ற இவர்களுக்கு, வரும் மார்ச் மாதத்தில் முறையே 1000, 500, 250 ரூபாய் பணப்பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
சாதனை மாணவியரை, பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.
எல்.கே.மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|