மைக்ரோகாயல் அமைப்பு காயல் மெடிக்கல் கார்ட் திட்டத்தை கடந்த மூன்றாண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டம், தொடர்ந்து நான்காவது ஆண்டாக இவ்வாண்டும் , ஷிஃபா ஹெல்ட் அண்ட் வெல்பேர் அசோசியேசன் மற்றும் KMT மருத்துவமனையுடன் இணைந்து, நடத்தப்படும் என அவ்வமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கீழ்க்காணும் இடங்களில் கிடைக்கும்:
விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள்:
1) ஷிபா ஹெல்ட் அண்ட் வெல்பர் டிரஸ்ட்
2) ஆல்பா டேட்டா
3) LTS ஜுவல்லரி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை LTS ஜுவல்லரியில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்க இறுதி நாள்: மார்ச் 3, 2016
இந்த திட்டத்தை பயன்படுத்த தகுதியானவர்கள் என கீழ்காண்பவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1) ஜகாத் வாங்க தகுதியுடையவர்கள் அல்லது
2) அனாதைகள் அல்லது
3) விதவைகள் அல்லது
4) புதிதாக இஸ்லாத்திற்கு திரும்பியவர்கள் அல்லது
5) ஆண் மகன் இல்லாத வயதான தேவையுடையவர்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross