காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி 27, 2011 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 5727]
ஞாயிறு, பிப்ரவரி 27, 2011
அகில இந்திய கால்பந்து போட்டியில் காயல் வீரர் சாதனை!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சார்ந்த கால்பந்து வீரர் பஷீர் அஹ்மத். சென்னையிலுள்ள மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் (MSU) என்ற கால்பந்து அணியின் தலைவராக இவர் உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சடோல் மாவட்டத்தில் 19.01.2011 முதல் 10.02.2011 வரை நடைபெற்ற தங்கக் கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டியில் இவர் தலைமையில் விளையாடிய அவ்வணி இறுதிப் போட்டியில் வென்று தங்கக் கோப்பையைத் தட்டிச் சென்றது.
மொத்தம் 17 அணிகள் பங்கேற்ற இச்சுற்றுப்போட்டியில் காயல்பட்டினத்தைச் சார்ந்த வீரர் பஷீர் அஹ்மதுக்கு அதிக கோல் அடித்த வீரருக்கான விருதும், மூன்று போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
|