கேரள மாநிலம் கோழிக்கோடு நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் அமைப்பு மலபார் காயல் நல மன்றம் (மக்வா. இவ்வமைப்பின் புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கோழிக்கோடு – கோட்டப்பரம்பாவிலுள்ள நெய்னாப்பா இல்ல மாடியில், இன்று 10.30 மணிக்குத் துவங்கியது.
வாக்குப் பதிவு துவங்கிய நேரம் முதலே மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஆர்வத்துடன் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தனர். 11.30 மணி வரை விறுவிறுப்புடன் சென்ற வாக்குப்பதிவு, அதற்குப் பிறகு சிறிது மந்தமானது.
பின்னர், வாக்குப்பதிவு நேரம் நிறைவடையும் தருணத்தில் மீண்டும் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.
!3.30 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுற்றதாக, தேர்தல் அதிகாரிகளான எஸ்.ஐ.ஜலீல், சாளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத். எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் ஆகியோர் இணைந்து அறிவித்தனர்.
மொத்த வாக்காளர் எண்ணிக்கை: 137
மொத்த வாக்குப்பதிவு: 98
அவற்றுள்,
நேரடி வாக்குப்பதிவு: 87
தபால் வாக்குப்பதிவு: 11
வாக்குப்பதிவு சதவிகிதம்: 71.53 %
மொத்தம் 15 பொறுப்பிடங்களுக்கு 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிவுகள் இன்று 16.30 மணியளவில் வெளியிடப்படும் என அறியப்படுகிறது.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், புதிய செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரும், தமக்குள் கலந்தாலோசித்து, மன்றத்தின் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
படங்களில் உதவி:
செய்யித் ஐதுரூஸ் (சீனா)
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
2013இல் நடைபெற்ற மக்வா தேர்தல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மக்வா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |