செய்தி எண் (ID #) 17385 | | | திங்கள், பிப்ரவரி 29, 2016 | தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 2275 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய | |
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து மைய அதிகாரிகள் கூறியதாவது:-
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 20 மி.மீ. மழை பதிவாகியது.
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திங்கள்கிழமை ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய பெய்யும் வாய்ப்புண்டு. மற்ற இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். வெப்பநிலை அதிகபட்சமாக 93 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என்றனர்.
தகவல்:
தினமணி
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|