காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
மார்ச் 2, 2008 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 1601]
ஞாயிறு, மார்ச் 2, 2008
காலையில் கனமழை! குடை பிடித்து கல்யாணம்!!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
கடந்த நான்கு நாட்களாக காயல்பட்டணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் குளிர்ந்த வானிலை காணப்படுகிறது. நேற்று முழுவதும் காயல்பட்டணத்தில் விட்டு விட்டு சாரல் மழை தூவியவண்ணம் இருந்தது.
இன்று காலை திடீரென கனமழை பெய்தது. அதன் காரணமாக வழமைபோன்று, காயல்பட்டணத்திலுள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாகக் காணப்பட்டன.
காயல்பட்டணம் காட்டுத் தைக்கா தெருவில் இன்று காலை கனமழைக்கிடையே ஒரு திருமணம் நடந்தேறியது.அழகிய மேடையமைக்கப்பட்டு, அம்மேடையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று அவர்கள் இருக்கையில், திடீரென பெய்த மழை காரணமாக, குறுகிய நேரத்தில் இடமாற்றம் செய்யவும் வழியின்றி, அதே மேடையில் மாப்பிள்ளைத் தோழர்கள் குடை பிடிக்க, திருமண நிகழ்ச்சி நடந்தேறியது.
மழைக்காட்சிகளும், குடைபிடி கல்யாணக் காட்சியும் உங்கள் பார்வைக்கு:-
|