காயல்பட்டினம் பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியில், இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரில் மக்தப் மத்ரஸா துவக்கப்பட்டுள்ளது. அதன் அறிமுக விழா, 21.02.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 10.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
எஸ்.எம்.அப்துல் காதிர். எஸ்.ஓ.ஸுலைமான், எஸ்.டி.ஷெய்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹாஃபிழ் எஸ்.எச்.அலீ ஃபஹத் கிராஅத் ஓதினார். பணி நிறைவு ஆசிரியர் ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஹாஃபிழ் என்.டீ.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். தலைமை தாங்கிய ஏ.அஹ்மத் தலைமையுரையாற்றினார்.
மக்தப் மாணவர்களுக்கு துவக்கப் பாடத்தை, பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எஸ்.எச்.மவ்லானா ஸாஹிப் துவக்கிக் கொடுத்தார்.
தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயும் - காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.டீ.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ வாழ்த்துரையாற்றினார்.
பள்ளியின் துணைச் செயலாளர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான் நன்றி கூற, எம்.ஏ.செய்யித் அபூதாஹிர் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|