70வது சந்தோஷ் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் பிப்ரவரி 29 அன்று நாக்பூரில் துவங்கின. இரு பிரிவுகளாக - பத்து அணிகள் இப்போட்டிகளில் கலந்துக்கொள்கின்றன.
பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி, மார்ச் 1 அன்று, தனது முதல் போட்டியில் - அஸ்ஸாம் அணியை, 3 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது.
தமிழக அணி, இன்று கோவா அணியுடன் மோதியது. ஆட்ட நேர இறுதியில், இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால், போட்டி - சரிசம நிலையில் முடிந்தது.
இரண்டு போட்டிகளில், 1 போட்டியில் வென்றும், 1 போட்டியில் டிரா செய்தும், தமிழக அணி - தனது பிரிவில் (பி), 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில உள்ளது.
கோவா அணி - மூன்று போட்டிகளில் விளையாடி - 2 போட்டிகளில் வென்றும், 1 போட்டியில் டிரா செய்தும், தனது பிரிவில் (பி), 7 புள்ளிகளுடன் 1வது இடத்தில உள்ளது.
தமிழக அணியின் கேப்டன், காயல்பட்டினம் சார்ந்த காழி அலாவுதீன் என்பது குறிப்பிடத்தக்கது. |