தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகள் 04.03.2016. அன்று துவங்கின. காயல்பட்டினத்தில் எல்.கே.மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி ஆகிய இரண்டு தேர்வு மையங்களில் மாணவ-மாணவியர் தேர்வெழுதி வருகின்றனர்.
எல்.கே.மேனிலைப்பள்ளி தேர்வு மையத்தில்,
எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 158 மாணவர்கள்,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 67 மாணவர்கள்,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 31 மாணவியர்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 24 மாணவ-மாணவியர்
தேர்வெழுதுகின்றனர்.
முதல் தேர்வு நாளான 04.03.2016. அன்று, எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், அப்பள்ளி மாணவர்கள் நன்முறையில் தேர்வெழுதுவதற்கு ஊக்கப்படுத்திடுவதற்காக, பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை, துணைத்தலைவர் எஸ்.எம்.உஸைர், பணி நிறைவு பெற்ற ஆசிரியர் எம்.ஏ.புகாரீ, ஆசிரியர் ஆனந்தக்கூத்தன், வாழ்த்துரையாற்றினார்.
துவக்கத் தேர்வை முன்னிட்டு, எல்.கே.மேனிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வெழுதும் அனைத்து மாணவர்களையும் அவர்களது பெற்றோர் பள்ளி வரை சென்று வாழ்த்தி, வழியனுப்பினர்.
தகவல் & படங்கள்:
இப்னு ஆப்தீன்
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|