காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 37ஆம் ஆண்டு விழா - பெண்கள் பிரிவிற்கு 25.02.2016. வியாழக்கிழமையன்றும், ஆண்கள் பிரிவிற்கு 26.02.2016. வெள்ளிக்கிழமையன்றும் - மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்புடன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.
பெண்கள் பிரிவு ஆண்டு விழா:
25.02.2016. வியாழக்கிழமையன்று காலையில், பெண்கள் பிரிவு ஆண்டு விழா, வாவு ஜைனப் தலைமையில் நடைபெற்றது. எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் ஃபாத்திமா, எம்.ஏ.சுபைதா, வாவு மும்தாஜ், யு.செய்யித் மர்யம், ஏ.எல்.ஹைருன்னிஸா, வாவு இசட்.ஏ.சேகு ஃபாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
05ஆம் வகுப்பு மாணவர் எம்.அப்துல் காதிர் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எம்.ஏ.சுபைதா தலைமை தாங்கினார். எம்.பி.ஏ.ஃபவ்ஸியா பேகம், எம்.கே.எஸ்.கிதுரு ஃபாத்திமா, எம்.எஸ்.கிதுரு ஃபாத்திமா, ஏ.எல்.ஹைருன்னிஸா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி ஆசிரியை எம்.டீ.பீவி ஃபாத்திமா வரவேற்புரையாற்றினார். தலைமையாசிரியை எம்.ஒய்.செய்யித் ஹஸீனா ஆண்டறிக்கையை வாசித்தார். காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கியதோடு, கடந்த (2014-2015) கல்வியாண்டில் ப்ளஸ் 2 தேர்வில் பள்ளியளவில்
முதலிடத்தைப் பெற்ற எம்.என்.நஸீபத்துல் ஸகீனாவுக்கு 1 கிராம் தங்க நாணயம்,
இரண்டாமிடம் பெற்ற கே.எஸ்.எம்.ஃபாத்திமா மஹ்திய்யாவுக்கு ரூபாய் 1300 பணப்பரிசு,
மூன்றாமிடம் பெற்ற எம்.எல்.செய்யித் ஜுல்ஃபாவுக்கு ரூபாய் 1000 பணப்பரிசு
ஆகிய பரிசுகளையும் வழங்கினார்.
பின்னர் மாணவியர் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 10ஆம் வகுப்பு மாணவியரான எம்.எம்.செய்யித் அஜீபா, கே.எஸ்.டீ.அஹ்மத் மர்ஸூக்கா ஆகியோர் இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர்.
நாட்டுப்பண், ஸலவாத்துடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
ஆண்கள் பிரிவு ஆண்டு விழா:
26.02.2016. வெள்ளிக்கிழமையன்று மாலையில், ஆண்கள் பிரிவு ஆண்டு விழா, வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி தலைமையில் நடைபெற்றது. பள்ளி பொருளாளர் ஜெஸ்மின் ஏ.கே.கலீலுர்ரஹ்மான், டாக்டர் பீ.ஏ.எம்.ஜாஃபர் ஸாதிக், எம்.எம்.சுல்தான், பள்ளி செயலாளர் ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன், துணைச் செயலாளர் என்.எம்.அப்துல் காதிர், எம்.க்யூ.அப்துர்ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் ஹாஃபிழ் எச்.எம்.முஹம்மத் ஃபரீதுத்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஆசிரியர் ஏ.எல்.பஷீருல்லாஹ் வரவேற்புரையாற்றினார். பள்ளி முதல்வர் டி.ஸ்டீஃபன் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
கனரா வங்கி ஆறுமுகநேரி கிளையின் மூத்த மேலாளர் வி.ஞானசேகரன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்ற, அவரும் - முன்னிலை வகித்தோரும் இணைந்து சாதனை மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
தொடர்ந்து மாணவர்களின் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளி ஆசிரியை எம்.சாமிளி நன்றி கூறினார். ஆசிரியை விஜயலக்ஷ்மி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நாட்டுப்பண் ஸலவாத்துடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், பள்ளி துணைச் செயலாளர் கே.எம்.டீ.சுலைமான் ஒருங்கிணைப்பில் பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், முன்னாள் - இந்நாள் மாணவ-மாணவியர் இணைந்து செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
(துணைச் செயலாளர் - முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி)
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில், கடந்தாண்டு (2015) நடைபெற்ற ஆண்டு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|