70வது சந்தோஷ் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் பிப்ரவரி 29 அன்று நாக்பூரில் துவங்கின. இரு பிரிவுகளாக - பத்து அணிகள் இப்போட்டிகளில் கலந்துக்கொள்கின்றன.
பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி, மார்ச் 1 அன்று, தனது முதல் போட்டியில் - அஸ்ஸாம் அணியை, 3 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது.
மார்ச் 5 அன்று நடைபெற்ற, கோவா அணிக்கு எதிரான தனது இரண்டாவது போட்டியில் - தமிழக அணி 0-0 என டிரா செய்தது.
மார்ச் 7 அன்று நடைபெற்ற, வங்காள அணிக்கு எதிரான தனது மூன்றாவது போட்டியில் - தமிழக அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இன்று - தமிழக அணி, தனது 4வது மற்றும் இறுதி சுற்றுப்போட்டியில் விளையாடியது. பஞ்சாப் அணியை எதிர்கொண்ட தமிழக அணி - 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
நான்கு போட்டிகளில், 3 போட்டியில் வென்றும், 1 போட்டியில் டிரா செய்தும், தமிழக அணி - தனது பிரிவில் (பி), 10 புள்ளிகள் பெற்றுள்ளது.
கோவா அணியும் - நான்கு போட்டிகளில் விளையாடி - 3 போட்டிகளில் வென்றும், 1 போட்டியில் டிரா செய்தும், தனது பிரிவில் (பி), 10 புள்ளிகள் பெற்றுள்ளது.
இரு அணிகளும் ஒரே புள்ளிகள் பெற்றிருந்தாலும், கோல்கள் வித்தியாசத்தில், தமிழக அணி முதல் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் - ஏ பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிராஅணியுடன், மார்ச் 11 அன்று நடைபெறும் அரை இறுதி போட்டியில் தமிழகம் விளையாடுகிறது.
முதல் அரை இறுதி போட்டியில் சர்விசஸ் அணியும், கோவா அணியும் விளையாட் உள்ளனர்.
தமிழக அணியின் கேப்டன், காயல்பட்டினம் சார்ந்த காழி அலாவுதீன் என்பது குறிப்பிடத்தக்கது.
[செய்தி திருத்தப்பட்டது @ 8:25 am / 10.3.2016] |