காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி பயின்றோர் பேரவைக்கு தற்காலிகமாக நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு, பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இலவச சீருடைகளை பேரவையின் சார்பில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான அனுசரணையும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் எல் கே மேனிலைப் பள்ளி வளாகத்தில், 03.03.2016 வியாழக் கிழமை 11 மணியளவில் ,ஹாஜி லேண்ட்மார்க் ராவன்னா அபுல் ஹசன் அவர்கள் தலைமையில், ஜனாப் காயல் S.E. அமானுல்லாஹ் அவர்கள் முன்னிலையில் பயின்றோர் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆசிரயர் புஹாரி அவர்கள் இறைமறை ஓதி . வருகைப் புரிந்தோரை வரவேற்று கூட்டத்தைத் துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில், பயின்றோர் பேரவையின் இதுநாள் வரையிலான உறுப்பினர் நுழைவுக் கட்டணம் மற்றும் நன்கொடைகளை உள்ளடக்கிய வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பேரவை துவக்கக் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டதின் அடிப்படையில் தற்காலிக நிர்வாகக் குழு இக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது
தற்காலிக நிர்வாகக் குழு
தலைவர்:
ஹாஜி லேண்ட்மார்க் ராவன்னா அபுல் ஹசன்
துணைத்தலைவர்கள்:
திரு P. ராஜா ராம் மோகன் ராய்
ஜனாப் M.L. ஹாரூன் ரஷீத்
செயலாளர்:
ஹாஜி M.A. புஹாரி
துணை செயலாளர்கள்:
ஜனாப் A.S. புஹாரி
ஜனாப் காழி அல்லாவுதீன்
பொருளாளர்:
ஜனாப் S.A.N. அஹமது மீரா தம்பி
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:
ஜனாப் காயல் S.E. அமானுல்லாஹ்
ஜனாப் J.A. லரீப்
ஜனாப் M. சதக் இபுராஹீம்
ஜனாப் L.T.S. சித்திக்
ஜனாப் நௌபல்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. பேரவையின் வருடாந்திரக் கூட்டத்தை எதிர்வரும் மே மாதத்தில் கூட்டுவது எனத் தீர்மானிக்கப்பட்டது
2. இதுவரை L.K பயின்றோர் பேரவையில் உறுப்பினராகாத பள்ளியின் முன்னாள் மாணவர்களை உறுப்பினர்களாக சேர்க்க தீவிர முயற்சி எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது
3. வருகிற கல்வி ஆண்டு முதல், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறுகிற எல்.கே பள்ளி மாணவர்களை உற்சாகமூட்டும் வகையில் அவர்களுக்கு ஊக்கத் தொகையினை வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது
4. வருகிற கல்வியாண்டு முதல் , எல் கே பள்ளியின் சீருடை மாற இருக்கிற சூழலில் , பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கிற பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது
இலவச சீருடை குறித்து தற்காலிக நிர்வாகக் குழுவின் தலைவர் ஹாஜி லேண்ட்மார்க் அபுல் ஹசன் அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள்:
எல் கே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
நமது பள்ளி பயின்றோர் பேரவை , இறையருளால் உதயமாகி , பள்ளிக்கும் , பயிலும் மாணவர் சமுதாயத்தினருக்கும் தனது சேவையை துவங்கித் தொடர ஆயத்தமாகிவிட்டது, அல்ஹம்துலில்லாஹ் .
இந்நிலையில், நமது பள்ளியில் எண்ணற்ற மாணவர்கள் தங்களது குடும்ப சூழலின் காரணமாக சீருடைகளுக்கான செலவினை சந்திக்க சிரமப்படுகின்றனர்.
மேலும், எதிர்வரும் கல்வியாண்டு முதல் நமது பள்ளியில் சீருடை மாற இருக்கிற சூழலில் , எளிய மாணவர்களுக்கு புதிய சீருடைக்கான செலவு சிரமத்தையே உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
இச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு எளிய மாணவர்களுக்கு பேரவையின் மூலம் சீருடைகளை வழங்குவது என்று தீர்மானித்திருக்கிறோம் .
ஒரு மாணவனுக்கு இரண்டு செட் சீருடைக்கு தையல் கூலியுடன் ஆகும் செலவு ருபாய் 1200 ஆகும்.சுமார் எளிய மாணவர்களுக்கு சீருடை உதவி தேவைப் படுகிறது.
எனவே, நமது பள்ளியில் பயின்ற வசதியுள்ள முன்னாள் மாணவர்கள் ,இப்போது பயிலும் எளிய மாணவர்களுக்கான இந்த உதவியை செய்ய முன்வருமாறு நிர்வாகக் குழுவின் சார்பில் வேண்டுகிறேன்.
முன்னாள் மாணவர்கள் தங்களால் முடிந்த அளவு மாணவர்களின் எண்ணிக்கைக்கு பொறுப்பு ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதாவது ஒரு முன்னாள் மாணவர் , எத்தனை மாணவர்களுக்கான சீருடைக்குரிய செலவினை ஏற்க முன் வருகிறீர்களோ, அந்த எண்ணிக்கையை பொறுப்பாளர்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன் .
எல்லாம் வல்ல இறைவன் நம் நன்நோக்கங்களை நிறைவேற்றி அருள்வானாக . வஸ்ஸலாம்
சீருடை பொறுப்பாளர்கள்
ஹாஜி லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹசன் (9789791204)
ஆசிரியர் M.A. புஹாரி ( 9842789817)
ஆசிரியர் S.A.N. அஹ்மத் மீரா தம்பி ( 9487775765 - meerathamby@gmail.com)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.கே. மேனிலைப்பள்ளி பயின்றோர் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |