தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
அவ்விதிமுறைகளின்படி, பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அந்தந்த கட்சியினரால் அகற்றப்பட வேண்டும் அல்லது அரசு சார்பில் அகற்றப்பட்டு, அதன் செலவுத் தொகை - தொடர்புடைய கட்சியிடம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்படடுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், நகர் முழுக்க அக்கட்சியால் நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை, நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், இளைஞரணி அமைப்பாளர் எம்.இசட்.ஸித்தீக் ஆகியோரடங்கிய குழுவினர் அகற்றி எடுத்துச் சென்றனர்.
இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|