காயல்பட்டினம் அல்அமீன் நர்ஸரி & துவக்கப்பள்ளியின் விளையாட்டு விழா, ஆண்டு விழா, சமுதாயக் கல்லூரி பட்டமளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள், 27.02.2016. சனிக்கிழமையன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அல்அமீன் நர்ஸரி & துவக்கப்பள்ளியின் விளையாட்டு விழா, ஆண்டு விழா, சமுதாயக் கல்லூரி பட்டமளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள், 27.02.2016. சனிக்கிழமையன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.
மாணவியர் கிராஅத் ஓத விழா துவங்கியது. பள்ளி ஆசிரியையர் ஆஃப்ரின், செல்வி, சுமய்யா, எஸ்.ஏ.எஃப்.ஃபாத்திமா ஃபஸ்லா, எஸ்.எம்.பி.சமீனா யாஸ்மீன் ஆகியோர் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்றனர்.
பள்ளி ஆட்சி மன்றச் செயலரும், சமுதாயக் கல்லூரி டிரஸ்டியுமான எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையேற்றார். கல்லூரி ஆலோசகர் ஜனாப். ஜெ.எஸ்.கபீர், ஜெஸ்மின் ஏ.கே.கலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்.கே.மேனிலைப்பள்ளி முதுகலை அரபி ஆசிரியர் ஜுபைர் அலீ வாழ்த்துரையாற்றினார்.
எல்.கே.மேனிலைப்பள்ளியின் வரலாறு பட்டதாரி ஆசிரியர் பீ.ஆனந்தகூத்தன் பள்ளியின் சேவைகளை பாராட்டி வாழ்த்து பாடல் பாடினார்.
விழாவில் முத்தாய்ப்பாக பள்ளி விளையாட்டு விழா நிகழ்ச்சியில், பேயன்விளை கே.ஏ. நர்ஸரி & துவக்கப் பள்ளியின் முதல்வர் ஜெயந்தி பபிதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
2ஆம் நாள் நடைபெற்ற காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நிகழச்சிகளில், வீரபாண்டியன் பட்டினம் விஸ்டம் பப்ளிக் பள்ளியின் உதவி ஆசிரியை எஸ்.ஜென்னத் சிறப்பு விருந்தினராகக் கலந்து, பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். சமுதாயக் கல்லூரி துணை முதல்வர் ஆர்.கோகிலா கல்லூரியின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பள்ளி செயலர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ, பள்ளி ஆட்சி மன்ற தலைவர் ஏ.எஸ்.முஹம்மத் அஷ்ரஃப் அலீ, பள்ளி தாளாளர் எம்.ஏ.புகாரீ, முதல்வர் (முதல்வர்) மாணிக்க மரியாள் ஆகியோர் பதக்கங்களை அணிவித்து கவுரவித்தனர்.
மாணவ-மாணவியரின் கூட்டு உடற்பயிற்சி அணிவகுப்பு, தாயிரா, லெஜிம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியைகள் ஸாஜிதா, சமீனா, முஜாஹிதா ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி ஆசிரியை ஆஃப்ரின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இறுதியில் ஆசிரியையர் ஆஃப்ரின், லெட்சுமி, சமீனா ஆகியோர் நன்றி நவில நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
விழாக்களுக்கான ஏற்பாடுகளை எம்.ஏ.சி.முஹம்மத் அப்துல் காதிர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்அமீன் நர்ஸரி & ப்ரைமரி பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சமுதாயக் கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |