காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
மார்ச் 14, 2002 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 237]
வியாழன், மார்ச் 14, 2002
காயல்பட்டணம் மாணிக்க வியாபாரிகள் சங்க தீர்மானம்!
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் பொதுக்குழு கூட்டம் 07-03-2002 வியாழன் மாலை 7 மணிக்கு எல்.கே. மேனிலைப்பள்ளி எஸ்.ஏ.சுலைமான் பிளாக்கில் வைத்து பேரவைத் தலைவர் அல்ஹாஜ் எம்.எம். உவைஸ் அவர்கள் தலைமையில், கௌரவ ஆலோசகர்கள் அல்ஹாஜ் பி.மஹ்மூது, அல்ஹாஜ் எஸ்.அக்பர்ஷா பி.ஏ., ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் அல்ஹாஜ் பிரபு சுல்தான் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் அல்ஹாஜ் எஸ்.ஏ.முகம்மது அலி அவர்கள் வருடாந்திர வரவு, செலவு அறிக்கை சமர்ப்பித்தார். நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் 139 பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு :
தீர்மானம் எண் : 9
பொருள் : காயல்பட்டணம் நகரில் மாணிக்க வியாபாரிகள் நூற்றுக்கணக்கானோர் 6-3-2002 அன்று கூட்டம் நடத்தி ஏகமனதாக நிறைவேற்றி கையெழுத்திட்டு நம்பேரவைக்கு சமர்ப்பித்துள்ள கோரிக்கை மனு பொதுக்குழுவின் பார்வைக்கும் முடிவிற்கும்.
தீர்மானம் :
நம் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாணிக்க வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. இந்த மாணிக்க வியாபாரிகளில் பெரும்பாலோர் நடுத்தர வர்க்கத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்மவர்கள் செய்யும் பல்வேறு தொழில்களும் இன்று நசிந்து விட்ட நிலையில் மாணிக்க வியாபாரம் இன்று ஓரளவு கைகொடுத்து வருகிறது. அத்தொழிலில் நமதூர் மாணிக்க வியாபாரிகள் இலங்கை மற்றும் வெளியிடங்களில் சொந்தமாக சென்று கொள்முதல் மற்றும் விற்பனை செய்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக நமதூரின் ஒரு சில மாணிக்க வியாபாரிகள் வெளியூர் மாணிக்க வியாபாரிகளை நேரிடையாக இலங்கைக்கு அழைத்துச் சென்று வியாபாரம் செய்வதால் நமது நகரின் பெரும்பாலான மாணிக்க வியாபாரிகள் பெரும் பாதிப்படைந்து வருவது வேதனைக்குரிய விஷயமாகும் என்பதை இக்கூட்டம் உணர்கிறது.
இந்த நிலை நீடித்தால் இந்த ஒரு சிலரையும் ஒதுக்கி விட்டு வெளியூர் வியாபாரிகள் நேரிடையாக தனியாக தொழில் செய்யும் சூழ்நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்ட இப்பொதுக்குழு கடமைப் பட்டுள்ளது.
எனவே இலங்கை போன்ற நாடுகளிலும், மும்பை, கொல்கத்தா, டெல்லி, ராஜஸ்தான், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தொழில் செய்யும் நமதூர் வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தொழில் பாதிப்பை உணர்ந்து மாணிக்க வியாபாரிகளான நம் சகோதரர்கள் தங்களுக்குள் சில கட்டுப்பாடுகளை செய்து கொள்ள இக்கூட்டம் வேண்டிக்கொள்கிறது.
1. நம்மவர்கள் வெளியூர் வியாபாரிகளை யாரையும் இலங்கைக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்றும்,
2. அப்படி வரும் வெளியூர் வியாபாரிகளிடம் நம் பிள்ளைகள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வியாபாரம் மற்றும் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனைகள் செய்யக்கூடாது என்றும்,
3. வெளியூர் வியாபாரிகளை அழைத்துச் செல்பவர்களோடு நம் பிள்ளைகள் தொழிலுக்கு (விற்க வாங்க) பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை வைக்கலாம் என்று மாணிக்க வியாபாரிகளால் வழங்கப்பட்ட ஆலோசனையை இக்கூட்டம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.
எனவே மேலே சொன்ன கட்டுப்பாடுகளை தங்களுக்குள் ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மாணிக்க வியாபாரிகளின் கவலையை துடைத்து ஒற்றுமையாக செயல்பட்டு ஆரோக்கியமான வியாபாரம் செய்;யுமாறு நமதூர் மாணிக்க வியாபாரிகள் அனைவரையும் இக்கூட்டம் அன்போடு கேட்டுக்கொள்கிறது.
தலைவர்
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை
காயல்பட்டணம்
நாள் : 11-03-2002
|