அரசியல் கட்சிகளின் தேர்தல் விளம்பரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் பின்வருமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அரசியல் கட்சியினர்; தேர்தல் விளம்பரங்கள் செய்வதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு செலவு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேர்தலின்போது வேட்பாளர்களால் செய்யப்படும் செலவுகள் கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கு ஏற்படும் செலவுகள் கண்காணிக்கப்பட்டு, அந்த செலவுகள் வேட்பாளரால் செலவு கணக்கில் காட்டப்படுகிறதா எனவும் கண்காணிக்கப்படுகிறது.
இதில் நேரடியாக விளம்பரங்கள் என ஊடகங்களில் காட்டப்படாமல் செய்தி என்ற போர்வையில் தேர்தல் விளம்பரங்கள் வருவதை கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை தொலைக்காட்சி அல்லது இணையதளத்தில் வெளியிட விரும்பினால், இது தொடர்பாக மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊடக விளம்பர சான்று வழங்குதல் மற்றும் கண்காணிப்பு குழு (Media Certification and Monitoring Committee) ஒப்புதல் பெற்று அதன் பின்னரே வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பை, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் தலைமை அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமார் வெளியிட்டுள்ளார்.
|