காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் பரிசளிப்பு விழா 29.02.2016. திங்கட்கிழமையன்றும், 25ஆவது ஆண்டு விழா 05.03.2016. சனிக்கிழமையன்றும் நடைபெற்றன.
பரிசளிப்பு விழா:
பரிசளிப்பு விழா, 29.02.2016. திங்கட்கிழமையன்று காலை, மாலை ஆகிய இரு வேளைகளில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காலை அமர்வில், எல்.கே.ஜி. முதல் 03ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியருக்கான பரிசளிப்ப விழா நடைபெற்றது. வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். அதே கல்லூரியின் பொருளியல் துறைத் தலைவர் சூரத் ஷீபா, எம்.என்.ஹாஜர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் இயற்பியல் ஆசிரியை எஸ்.முத்துமாரி வரவேற்றுப் பேசினார். ஆங்கில ஆசிரியை ரா.செல்வநங்கை விருந்தினரை வரவேற்றார்.
போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கு, சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி, வாழ்த்துரையாற்றினர். ஆங்கில ஆசிரியை ஸ்ரீதேவி நன்றி கூறினார்.
மாலையில், 04 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் உடற்கல்வி பேராசிரியர் அனிஷ்டா தலைமை தாங்கினார். அதே கல்லூரியின் கணிதத் துறை தலைவர் சுதா, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை செவிலி ஏ.ஜோஸ்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணினி ஆசிரியை எஸ்.எஸ்.ஃபாத்திமா நவாஜியா வரவேற்றார். உயிரியல் ஆசிரியை பீ.கன்னிகா பாரதி விருந்தினர்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கு, சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி, வாழ்த்துரையாற்றினர்.
பள்ளியின் ஆங்கில ஆசிரியை அமலாராணி நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
25ஆம் ஆண்டு விழா:
பள்ளியின் 25ஆம் ஆண்டு விழா, 05.03.2016. சனிக்கிழமையன்று வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் டாக்டர் டீ.மல்லிகா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினார்.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் துணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கணினி ஆசிரியை ஆர்.எம்.ஜைனப் வரவேற்றுப் பேசினார். பள்ளி தாளாளர் வாவு எம்.எம்.முஃதஸிம் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி பள்ளியின் ஆண்டறிக்கையை தமிழிலும், ஆங்கில ஆசிரியை ஆர்.செல்வநங்கை ஆங்கிலத்திலும் வாசித்தனர்.
கடந்த கல்வியாண்டில் 10ஆம், 12ஆம் வகுப்புகளில் பள்ளியளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவியருக்கும், 100 சதவிகித தேர்ச்சிக்கு வழிவகுத்த ஆசிரியையருக்கும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, பள்ளி மாணவ-மாணவியரின் பங்கேற்பில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அறிவியல் ஆசிரியை சி.கலா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
அனைத்து விழாக்களுக்கான ஏற்பாடுகளையும், பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர் ஒருங்கிணைப்பில், அலுவலர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
கடந்தாண்டு (2015) நடைபெற்ற சென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|