மனிதநேய ஜனநாயகக் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகக் கூட்டம், காயல்பட்டினம் எல்.கே.காலனி தைமிய்யா இல்லத்தில், 07.03.2016. திங்கட்கிழமையன்று 19.00 மணியளவில், மாவட்டச் செயலாளர் ஜாஹிர் ஹுஸைன் தலைமையில் நடைபெற்றது.
கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மன்னை செல்லச்சாமி இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிதாகத் துவக்கப்பட்டுள்ள இக்கட்சி குறித்தும், அதன் வருங்கால செயல்திட்டங்கள் குறித்தும் அறிமுகவுரையாற்றினார்.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - புதிய நிர்வாகிகள்:
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் பின்வருமாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
நகர செயலாளர்: எம்.ஏ.ஆஸாத்
நகர பொருளாளர்: எஸ்.மீரான்
நகர துணைச் செயலாளர்கள்:
(1) எஸ்.கபீர் சுல்தான்
(2) இசட்.ஜியாவுத்தீன்
(3) கே.யூஸுஃப் அலீ
நகர இளைஞரணி: ஏ.முஹம்மத் நஜீப்
நகர தொண்டரணி: எம்.ஹுஸைன்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்: தமீமுல் அன்ஸாரீ
இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை நகரச் செயலாளர்: அப்துல் அஜீஸ்
மனிதநேய ஜனநாயக ஆட்டோர் ஓட்டுநர் சங்க செயலாளர்: எஸ்.எம்.ஜிஃப்ரீ
துணைச் செயலாளர்: அப்துல்லாஹ்
வார்டு செயலாளர்கள்:
பீ.ஜரீத் மன்சூர் (06ஆவது வார்டு)
ஜெ.முஸ்தாக் (07ஆவது வார்டு)
ஷேக் (15ஆவது வார்டு)
தீர்மானம் 2 - தீவிர உறுப்பினர் சேர்க்கை:
கட்சிக்கு நகரில் தீவிரமாக உறுப்பினர் சேர்க்கை நடத்துவதென்றும், அனைத்து வார்டுகளுக்கும் நிர்வாகம் அமைத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - அரசியல் மறுமலர்ச்சி மாநாடு:
கட்சியின் சார்பில் சென்னையில் 26.03.2016. அன்று நடத்தப்படவுள்ள அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டில் காயல்பட்டினத்திலிருந்து பெருந்திரளாகச் சென்று கலந்துகொள்ள தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - சட்டமன்றத் தேர்தல் பணி:
வரும் சட்டமன்றத் தேர்தலில், கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியின் வெற்றிக்காக தீவிரமாகப் பணியாற்றிட தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றியுரை, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், சமத்துவ மக்கள் கட்சியின் பொருளாளர் சுல்தான் தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த சிலர் மனிதநேய ஜனநாயக கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் அமைப்பான மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து பிரிந்த தமீமுன் அன்ஸாரீ தலைமையில், மனிதநேய ஜனநாயகக் கட்சி துவக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |