திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 64ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், 02.03.2016. புதன்கிழமையன்று 10.30 மணியளவில், காயல்பட்டினம் அஞ்சல் அலுவலகம் அருகில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கட்சியின் காயல்பட்டினம் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கிதுரு முஹம்மத் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலாளர் ஜின்னா கட்சிக் கொடியேற்றினார்.
நகர துணைச் செயலாளர் ஆர்.எஸ்.கணபதி, மாவட்ட பிரதிநிதி தங்கம் கஸ்ஸாலி, வார்டு செயலாளர் கே.எஸ்.ஐ.உமர், கட்சியின் பேச்சாளர்கள் உடந்தை மகாராசன், பாலப்பா அப்துல் காதிர் ஆகியோர் உரையாற்றினர்.
இவ்விழாவில், திமுக அங்கத்தினர் கலந்துகொண்டனர்.
திமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|