தமிழகத்தில், பன்னிரண்டாம் வகுப்புக்கான (ப்ளஸ் 2) அரசுப் பொதுத்தேர்வுகள் இன்று துவங்கின. காயல்பட்டினத்தில், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளிலிருந்து 582 மாணவ-மாணவியர் நிகழாண்டில் ப்ளஸ் 2 தேர்வெழுதுகின்றனர்.
இன்று முதல் தேர்வை முன்னிட்டு, அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில், மாணவ-மாணவியரும், அவர்கள்தம் பெற்றோரும் திரளாகக் கலந்துகொண்டு, உருக்கமுடன் பிரார்த்தித்தனர்.
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில், பள்ளியின் நிர்வாகி ஏ.எச்.நெய்னா ஸாஹிப் மாணவர்களுக்கு தேர்வறை நுழைவுச் சீட்டை வழங்கிய பின், அப்பள்ளி ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ பிரார்த்தனையை வழிநடத்த, அனைவரும் உருக்கமுடன் அதில் பங்கேற்ற காட்சிகள்:-
வெள்ளிக்கிழமை ஜும்ஆ நாளான இன்று அரசுப் பொதுத்தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு, சிறிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி ஆகிய பள்ளிகளில் வழமையை விட 15 நிமிடங்கள் தாமதமாகவும், மகுதூம் ஜும்ஆ பள்ளியில் வழமையை விட 7 நிமிடங்கள் தாமதமாகவும் தொழுகை துவங்கியது.
தகவல் (சென்ட்ரல் மேனிலைப்பள்ளி):
A.பீர் முஹம்மத் ஹுஸைன் & த.நியாஸ்
(ஆசிரியர்கள், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி)
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|