03.03.2016. வியாழக்கிழமையன்று (நாளை) அய்யா வைகுண்டசாமி பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் அய்யா வைகுண்டசாமி வழிபாட்டுத் தலங்களில் அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 20ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 03.03.2016. வியாழக்கிழமையன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும், 03.03.2016. அன்று அரசுத் தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ / மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி (Negotiable Instrument Act) பொது விடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மாவட்டக் கருவூலம், சார் நிலைக் கருவூலங்கள் குறைந்தளவு பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்குப் பகரமாக, 12.03.2016. இரண்டாம் சனிக்கிழமையன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அய்யா வைகுண்டசாமி பிறந்த நாளை முன்னிட்டு கடந்தாண்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டமை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|