எழுத்து மேடை மையம், தமிழ்நாடு ஏற்பாட்டில் பிரபல ஆவணபப்ட இயக்குனர் ஆர்.பி.அமுதனின் கதிர் வீச்சு கதைகள் - பகுதி 1: மணவாளக்குறிச்சி ஆவணப்படம், காயல்பட்டினத்தில் - மார்ச் 5 திரையிடப்படவுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பகுதியில் மணல் அள்ளும் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் அடைந்துள்ள பாதிப்புகளை விளக்கும் இந்த ஆவணப்படம் - மார்ச் 5 சனிக்கிழமையன்று அன்று மாலை 4:50 மணியளவில், ஹாஜியப்பா பள்ளி எதிரில், காயல்பட்டினம் பிரதான வீதியில் உள்ள துஃபைல் வணிக வளாக - ஹினாயா சிற்றரங்கத்தில் திரையிடப்படும்.
காயல்பட்டினம் எல்லையில் இருந்து செயல்புரியும் DCW தொழிற்சாலை, மணவாளக்குறிச்சி பகுதியில் இருந்து தான் தனது SYNTHETIC RUTILE தொழிற்சாலைக்கு தேவையான கதிர்வீச்சு தன்மை கொண்ட, இல்மனைட் (ILMENITE) தாது மணலை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சி குறித்து கூடுதல் விபரம் பெற - 91713 24824 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
|