காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விபரம் வருமாறு:-
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் - ஹிஜ்ரீ 1437ஆம் ஆண்டு வைபவங்களுக்கு புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டம், 29.02.2016. திங்கட்கிழமையன்று 20.30 மணிக்கு மஜ்லிஸ் ஹல்காவில், அதன் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமையில் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.செய்யித் ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை, இணைச் செயலாளர் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ வாசித்தார்.
மஜ்லிஸ் அங்கத்தினரும், அபிமானிகளுமான
(1) ஹாஜி எஸ்.என்.முஹம்மத் நூஹ்
(2) ஹாஃபிழ் நஹ்வீ செய்கு அப்துல் காதிர்
(3) ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ ஸாஹிப்
(4) பீ.டீ.ஷாஹுல் ஹமீத்
(5) சொளுக்கு எம்.ஏ.ஷெய்கு அப்துல் காதிர்
(6) மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எச்.செய்யித் அஹ்மத் பதவீ
ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களின் மஃபிரத் - பிழைபொறுப்பிற்காக துஆ இறைஞ்சப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்தாண்டின் வரவு - செலவு கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
நடப்பு 89ஆம் ஆண்டு மஜ்லிஸ் வைபவ
துவக்க நாள் 09.04.2016. சனிக்கிழமை என்றும்,
துஆ நாள் (நிறைவு நாள்) 08.05.2016. ஞாயிற்றுக்கிழமை என்றும்,
நேர்ச்சை நாள் 09.05.2016. திங்கட்கிழமை என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மஜ்லிஸ் புதிய நிர்வாகிகள் பின்வருமாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம்
துணைத் தலைவர்:
டி.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ் இமாம்
மேலாளர் (மேனேஜர்):
ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார்
இணைச் செயலாளர்கள்:
(1) ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப்
(2) மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ
(3) மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ
துணைச் செயலாளர்:
ஹாஜி எஸ்.எஸ்.ஷாஹுல் ஹமீத்
வைபவ கமிட்டி தலைவர்கள்:
(1) ஹாஜி கே.எம்.செய்யித் அஹ்மத்
(2) மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ
(3) பெத்தப்பா எம்.ஏ.சி.சுல்தான் அப்துல் காதிர்
இவ்வாறாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மக்கள் கூடும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவை மதித்தும், மஜ்லிஸின் தற்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டும் - புகைப்படம் & வீடியோ பதிவு செய்வதற்கு உலமாக்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை பெற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இன்னும் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த - மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் கடந்தாண்டிற்கான [ஹிஜ்ரீ 1436 - 88ஆம் ஆண்டிற்கான] புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|