காயல்பட்டினம் சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) உட்பட மாநிலத்தின் ஐந்து இடங்களில் - 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் - மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா, சட்டமன்ற விதிமுறை 110இன் கீழ், செப்டம்பர் 23 அன்று சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாநிலம் முழுவதும் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். அதில் காயல்பட்டினம் சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) பகுதியில் - மீன் இறங்குதளம் அமைக்க காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டதும் ஒன்றாகும்.
தகவல்: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9.
சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்), இந்த இடம் காயல்பட்டினத்தை சேர்ந்ததா இல்லை தனி ஒரு ஊரா ,
அப்படி காயல்பட்டினத்தை சேர்ந்தது என்று சொன்னால் காயல்பட்டினம் என்பது குறிப்பிட வில்லை ,
காயல் வாசிகளே இன்னும் தூங்கி கொண்டு இருக்காதீர்கள் , அரக்கன் உங்களுக்கு அருகமைல நெருங்கி கொண்டு இருகின்றான் , சிங்கி துறையை தனியாக பிரித்து அவர்கள் பக்கம் வைத்து கொண்டு விட்டு என்ன வேண்டாலும் செய்யலாம் இன்று கடலில் தண்ணீரை தான் கலக்கு கிறார்கள் நாளை சிங்கி துறைல ஒரு தொழிற்சாலை கூட நிறுவலாம் ,காயல் மக்களே உசார்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross