காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி 12, 2011 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 5652]
சனி, பிப்ரவரி 12, 2011
வழமைபோல “செங்கடல்”!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
10.02.2011 அன்று மாலையில் காயல்பட்டினம் நகரில் கடல் மீண்டும் செந்நிறத்தில் காட்சியளித்தது. கடலோரத்தில் பெரிய ஆமை ஒன்றும் இறந்து கிடந்தது. காட்சிகள் பின்வருமாறு:-
மழைக்காலம், கோடை காலம், குளிர் காலம், வசந்த காலம் என்பது போல காயல்பட்டினம் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் இனி “செங்கடல் காலம்” என்றொன்று வந்தாலும்,
கவிஞர்கள் இனி செங்கடலையும் வர்ணித்து பக்கம் பக்கமாக பாடல்கள் எழுதினாலும் அதில் வியப்பேதும் இருக்கப்போவதில்லை.
|